தேசிய செய்திகள்

உ.பி.யில் பயங்கரம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரிப்பு + "||" + Woman gang-raped and burnt alive in Uttar Pradesh s Sambhal

உ.பி.யில் பயங்கரம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரிப்பு

உ.பி.யில் பயங்கரம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரிப்பு
உத்தரபிரதேசத்தில் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்ட கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.
லக்னோ,


ஷாபால் மாவட்டம் குன்னார் பகுதியில் பெண், 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ஜூலை 13-ம் தேதி பெண் தன்னுடைய மகளுடன் வீட்டில் தனியாக இருந்தபோது ஒரு கும்பல் வீட்டிற்குள் புகுந்து உள்ளது. அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அவரை அக்கும்பல் அருகே இருந்த குடிசைக்கு கொண்டு சென்று, உயிருடன் எரித்துள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. அராம் சிங், மகாவீர், சரண் சிங், குலு மற்றும் போனா ஆகிய 5 பேருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளோம் என போலீஸ் தெரிவித்துள்ளது. 

பாதிக்கப்பட்ட பெண்ணின் சடலம் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது, குற்றவாளிகளை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் காசியாபாத் பகுதியில் பணி செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
2. சினிமாவில் பலாத்காரம் இல்லை: “பாலியல் சம்பவங்கள் சம்மதத்துடன்தான் நடக்கிறது” - நடிகை ஷில்பா ஷிண்டே
பாலியல் சம்பவங்கள் சம்மதத்துடன்தான் நடக்கிறது நடிகை ஷில்பா ஷிண்டே தெரிவித்துள்ளார்.
3. உத்தரபிரதேசம்: 2 வாலிபர்கள் அடித்துக்கொலை
உத்தரபிரதேசத்தில் 2 வாலிபர்கள் மர்ம கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டனர்.
4. உத்தரபிரதேசம்: எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு 7 பேர் சாவு; 30 பேர் காயம் - பிரதமர் மோடி இரங்கல்
உத்தரபிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு 7 பேர் உயிரிழந்தனர், சுமார் 30 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
5. உத்தரபிரதேசம்: விமானப்படை விமானம் விழுந்து விபத்து
உத்தரபிரதேத்தில் விமானப்படை விமானம் விழுந்த விபத்தில் சிக்கிய 2 விமானிகள் உயிர் தப்பினர்.