பங்களா சேதப்படுத்தப்பட்ட விவகாரம்: ‘ரூ.11 லட்சம் பரிசு வழங்க தயார்’ அகிலேஷ் யாதவ் அறிவிப்பு


பங்களா சேதப்படுத்தப்பட்ட விவகாரம்: ‘ரூ.11 லட்சம் பரிசு வழங்க தயார்’ அகிலேஷ் யாதவ் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Aug 2018 10:45 PM GMT (Updated: 5 Aug 2018 10:39 PM GMT)

சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்–மந்திரியுமான அகிலேஷ் யாதவ் லக்னோ நகரில் விக்கிரமாதித்யா மார்க் பகுதியில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வந்தார்.

லக்னோ,

சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்–மந்திரியுமான அகிலேஷ் யாதவ் லக்னோ நகரில் விக்கிரமாதித்யா மார்க் பகுதியில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வந்தார். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் அவர் அந்த பங்காளவை காலி செய்துவிட்டு வெளியேறினார். ஆனால் அவர் வெளியேறும் முன் பங்களாவை சேதப்படுத்தி விட்டதாக, உத்தரபிரதேச மந்திரி சித்தார்த் நாத் குற்றம்சாட்டினார். ஆனால் இதை அகிலேஷ் யாதவ் மறுத்தார்.

இந்த நிலையில், லக்னோ நகரில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அகிலேஷ் யாதவ், அரசு பங்களாவை சேதப்படுத்தியவர்கள் யார் என்பதை யாராவது கண்டுபிடித்து சொன்னால் அவர்களுக்கு, சமாஜ்வாடி கட்சியினரிடம் தலா ரூ.2,000 ஆயிரம் நன்கொடை வசூலித்து ரூ.11 லட்சம் பரிசாக வழங்க தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.


Next Story