தேசிய செய்திகள்

9-ம் தேதி தலித் அமைப்பு நாடு தழுவிய போராட்டம்: பொதுமக்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் அரசு வலியுறுத்தல் + "||" + Dalit groups call for Bharat bandh on August 9, govt urges people not to participate

9-ம் தேதி தலித் அமைப்பு நாடு தழுவிய போராட்டம்: பொதுமக்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் அரசு வலியுறுத்தல்

9-ம் தேதி தலித் அமைப்பு நாடு தழுவிய போராட்டம்: பொதுமக்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் அரசு வலியுறுத்தல்
ஆக்ஸ்ட் 9-ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு தலித் அமைப்பு அழைப்புவிடுக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் என்று அரசு வலியுறுத்தி உள்ளது.
புதுடெல்லி,

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம், கடுமையான சில பிரிவுகளை நீக்கி கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு அந்த சட்டத்தை நீர்த்துப்போகச் செய்துள்ளதாக பல்வேறு அரசியல் கட்சியினரும் தலித் அமைப்பினரும் குற்றம்சாட்டினர்.

இந்த சட்டத்தை மீண்டும் கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் ( 9-ம் தேதி)  நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு தலித் அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.

இந்தநிலையில், “எஸ்சி, எஸ்டி சட்டத்தை மீண்டும் கடுமையாக்குவது தொடர்பான புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை 1-ம் தேதி ஒப்புதல் வழங்கி உள்ளது. எனவே, இந்த மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற அரசு விரும்புகிறது என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 

இந்தநிலையில்,  நாளை ஆகஸ்ட் 9-ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு  தலித்  அமைப்பு  அழைப்பு விடுத்ததை தொடர்ந்து,  மத்திய மந்திரி ராம்தாஸ் அதாவல் கூறியதாவது:

தலித் சமூகத்தினரின் உரிமைகளை பாதுகாக்க அரசு உறுதி அளித்துள்ளது.  நாட்டில் அமைதி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை பராமரிக்கவும் பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.