ஜின்னா பிரதமர் ஆகியிருந்தால் இந்தியா பிரிக்கப்பட்டு இருக்காது தலாய்லாமா


ஜின்னா பிரதமர் ஆகியிருந்தால் இந்தியா பிரிக்கப்பட்டு இருக்காது தலாய்லாமா
x
தினத்தந்தி 8 Aug 2018 12:58 PM GMT (Updated: 8 Aug 2018 12:58 PM GMT)

முகமது அலி ஜின்னா பிரதமர் ஆகியிருந்தால் இந்தியா பிரிக்கப்பட்டு இருக்காது என தலாய்லாமா கூறியுள்ளார். #DalaiLama #Jinnah

புதுடெல்லி,

கோவா மாநில மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திபெத்திய தலைவர் தலாய்லாமா மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். சரியான முடிகள் தொடர்பாக மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய தலாய்லாமா, நிலப்பிரபுத்துவ முறையைவிட ஜனநாயக முறையே நல்லது, அதில் முடிவெடுக்கும் அதிகாரம் சிலரிடம் மட்டுமே உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இந்தியாவை பார்க்கையில், முகமது அலி ஜின்னாவிற்கு பிரதமர் பதவியை கொடுக்க மகாத்மா காந்தி விரும்பியதாக நான் நினைக்கிறேன். ஆனால் ஜவகர்லால் நேரு அதனை மறுத்துவிட்டார். 

பிரதமர் ஆக வேண்டும் என்று அவர் ஸ்திரமாக இருந்தார். மகாத்மா காந்தியின் திட்டமானது நிறைவேறியிருந்தால், இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாகவே இருக்கும். நேருவை எனக்கு மிகவும் நன்றாகவே தெரியும், மிகவும் அனுபவம் வாய்ந்தவர், ஆனால் சில தவறுகளும் நடந்துள்ளது என கூறியுள்ளார். 

Next Story