தேசிய செய்திகள்

நம்பிக்கை இழந்தவர்கள்தான் உள்நாட்டு போர் என்பார்கள் மம்தாவிற்கு பிரதமர் மோடி பதிலடி + "||" + PM Modi takes on Mamata over NRC Only those who have lost faith, will use words like civil war bloodbath

நம்பிக்கை இழந்தவர்கள்தான் உள்நாட்டு போர் என்பார்கள் மம்தாவிற்கு பிரதமர் மோடி பதிலடி

நம்பிக்கை இழந்தவர்கள்தான் உள்நாட்டு போர் என்பார்கள் மம்தாவிற்கு பிரதமர் மோடி பதிலடி
தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் மம்தா பானர்ஜிக்கு பதிலடிகொடுத்த பிரதமர் மோடி, நம்பிக்கை இழந்தவர்கள்தான் உள்நாட்டு போர் என்பார்கள் என்று கூறியுள்ளார். #PMModiஅசாம் மாநிலத்தில் வசிப்போர் குறித்த தேசிய குடிமக்கள் இறுதி வரைவு பதிவேடு வெளியிடப்பட்டதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி இதுபற்றி மோடி அரசை கடுமையாக விமர்சித்தார்.

மம்தா பானர்ஜி பேசுகையில் “தனது அரசியல் லாபங்களுக்காக மோடி அரசு லட்சக்கணக்கானவர்களை நாடு இல்லாதவர்களாக ஆக்க முயற்சி செய்கிறது. நாட்டு மக்களை இரண்டாக பிளக்க சதி செய்கிறது. இது நாட்டில், உள்நாட்டு போருக்கும், ரத்தகளரிக்கும் வழி வகுக்கும். இதேபோல் தேசிய குடிமக்கள் பதிவேட்டை மேற்கு வங்காளத்தில் உங்களால் வெளியிட முடியுமா?... அப்படி செய்தால் உங்களால் ஒரு போதும் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது” என்று சாடினார். இதுதொடர்பாக மம்தா பானர்ஜிக்கு எதிராக காவல் நிலையங்களில் புகாரும் தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடி பதிலடி

இப்போது மம்தா பானர்ஜியின் உள்நாட்டு போர் கருத்துக்கு பதிலடியை கொடுத்துள்ள பிரதமர் மோடி, நம்பிக்கை இழந்தவர்கள்தான் உள்நாட்டு போர் என்பார்கள் என்று கூறியுள்ளார். “நம்பிக்கையை இழந்தவர்களும், ஆதரவை இழந்துவிடுவோம் என அச்சம் கொள்பவர்களும், நம்முடைய அரசியலமைப்பில் நம்பிக்கை குறைந்தவர்களும்தான்  ‘உள்நாட்டு போர்’ ,  ரத்தகளரிக்கு வழி போன்ற வார்த்தையை பயன்படுத்துவார்கள்,” என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி, ரனில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை இரு தரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை
பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயும் டெல்லி ஐதராபாத் இல்லத்தில் சந்தித்து பேசினர்.
2. மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் பிரதமர் மோடி பொய் பேசுகிறார் - அசோக் சவான் குற்றச்சாட்டு
மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் பிரதமர் மோடி பொய் பேசுவதாக மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறினார்.
3. ஒவ்வொரு இந்தியரின் மனதிலும், சிந்தனையிலும் அப்துல்கலாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்: பிரதமர் மோடி
ஒவ்வொரு இந்தியரின் மனதிலும், சிந்தனையிலும் அப்துல்கலாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
4. பிரதமர் மோடி ரபேல் போர் விமான ஒப்பந்த விவரங்களை மறைக்கிறார் - காங்கிரஸ் குற்றச்சாட்டு
பிரதமர் மோடி ரபேல் போர் விமான ஒப்பந்த விவரங்களை மறைக்கிறார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
5. இரவு நேரத்தில் பணிபுரியும் பெண்களின் இன்னல்களை அகற்றி மத்திய அரசு பாதுகாப்பு வழங்கிறது - பிரதமர் மோடி
இரவு நேரத்தில் பணியாற்றும் பெண்களின் இன்னல்களை அகற்றி மத்திய அரசு உரிய பாதுகாப்பு வழங்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.