அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி


அமெரிக்க  டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
x
தினத்தந்தி 13 Aug 2018 7:51 AM GMT (Updated: 13 Aug 2018 7:52 AM GMT)

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

புதுடெல்லி,

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக  வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 69.62 ஆக இருக்கிறது. துருக்கியில் நிலவி வரும்  நிச்சயமற்ற தன்மையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 

நேற்று டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 69.53 ஆக ஆனது. ஆனால், சந்தை நேர முடிவில் அது சற்று அதிகரித்து 68.84 ஆக நிலைகொண்டது. ஆனால், இன்று காலை மீண்டும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.


Next Story