தேசிய செய்திகள்

கனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை + "||" + Flood alert in Karnataka as heavy rain lash coastal districts

கனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக மாநிலத்தில் பெய்யும் கனமழை காரணமாக மாநில நிர்வாகம், கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. #KarnatakaFloods
பெங்களூரு,

இந்தியாவின் தெற்கு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் கர்நாடக மாநில நிர்வாகம், மாநிலத்தின் கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, கர்நாடக முதல்வர் குமாரசாமி மாவட்ட முதன்மை அதிகாரிகளுடன் வெள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.  

தக்‌ஷின கன்னடா, டோடாகு, ஹாஷன், சிக்கமங்களூரு மற்றும் ஷிவ்மோகா ஆகிய மாவட்டங்களின் துணை ஆணையர்கள் வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வாரமாக இந்த மாவட்டங்களில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் மழையினால் ஏற்படும் நிலச்சரிவை சரிசெய்வது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் தக்‌ஷின கன்னடா மாவட்டத்தில் 33.8 செ.மீ, உடுப்பியில் 35.7 செ.மீ, உத்தர கன்னடா 33.6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.