கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்


கேரள வெள்ளபாதிப்பு :  மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்
x
தினத்தந்தி 17 Aug 2018 6:43 AM GMT (Updated: 17 Aug 2018 6:43 AM GMT)

கேரள வெள்ள பாதிப்பு காட்சிகள் மீட்பு குழுவையே கண்கலங்க வைத்திருக்கிறது.

கொச்சி

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத அளவு பெய்துவரும் கன மழையால் இதுவரை 94 பேர்  பலியாகியுள்ளனர்.  நீடிக்கும் மழையால் அத்தியாவசிய பொருட்களை கூட பெற முடியாமல் அப்பாவி மக்கள் தவித்து வருகின்றனர். 

பள்ளி- கல்லூரிகளுக்கு 28-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும், அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும், தேர்வுகளுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது.

கேரளாவில் நடைபெறும் மீட்பு பணிகள் குறித்து கேரள முதல்வரிடம் கேட்டறிந்தார்  நிர்மலா சீதாராமன்

கேரளாவில் வெள்ளபாதிப்பு அதிகமாக இருப்பதால் மீட்பு, நிவாரணப்பணிகளுக்காக கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்ப மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவு

அவர்களுக்கு மீட்பு குழுவினர் முழு முயற்சியுடன் உதவிட முயன்று வருகின்றனர். இந்த நிலையில் மீட்பு குழுவை சேர்ந்த நபர் ஒரு வீட்டினுள் சென்று அங்கு இருக்கும் சிறுமியிடம் வீட்டில் உணவு இருக்கிறதா? என கேட்கிறார். அந்த சிறுமி இல்லை என பதிலளித்திருக்கிறார். காலையில் சாப்பிட்டீர்களா? என்ற கேள்விக்கும் இல்லை என்றே பதிலுரைக்கிறார். இல்லை என்று சொல்லும் போது அவரது முகத்தில் இருக்கும் புன்னகை அங்கு வந்த மீட்பு குழுவையே கண்கலங்க வைத்திருக்கிறது.

இல்லை என கூறும் போது “பசி எனக்கு பழகிப்போனது தான் என்பது போல அந்த சிறுமி நடந்து கொண்டவிதம்” வெள்ளத்தை விட கொடுமையானது வறுமை என்று உணர வைப்பதாக அந்த மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தின் இடுக்கி பகுதியை சேர்ந்த அந்த சிறுமியின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.


Next Story