மோடி மீண்டும் பிரதமராவதை கூட்டணியில் உள்ள சிலரே விரும்பவில்லை -மத்திய மந்திரி வருத்தம்


மோடி மீண்டும் பிரதமராவதை கூட்டணியில் உள்ள சிலரே விரும்பவில்லை -மத்திய மந்திரி வருத்தம்
x
தினத்தந்தி 1 Sep 2018 6:12 AM GMT (Updated: 1 Sep 2018 6:25 AM GMT)

மோடி மீண்டும் பிரதமராவதை கூட்டணியில் உள்ள சிலர் விரும்பவில்லை என்று மத்திய மந்திரி உபேந்திர குஷ்வாஹா வருத்தம் தெரிவித்துள்ளார். #NarendraModi

பாட்னா,

வரும் 2019-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்பது மட்டுமன்றி 2022-ம் ஆண்டில் புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்று பாஜகவினர் முழங்கி வருகின்றனர். 

இந்தநிலையில்,  பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி தலைவர்  உபேந்திர குஷ்வாஹா மத்திய இணை மந்திரியாக உள்ளார். இவர்  பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மோடி மீண்டும் பிரதமராவதை கூட்டணியில் உள்ள சிலர் விரும்பவில்லை என கூறி வருகின்றனர். இத்தகையவர்கள் வேண்டுமென்றே பாஜக விற்கும், ராஷ்டிரிய லோக் சமதா கட்சிக்கும் மோதல்களை தூண்டுவதற்கு வதந்திகளை பரப்புகின்றனர்.  மோடியே மீண்டும் பிரதமர் ஆக விரும்புகிறேன். 

தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரின் நலனுக்காக குரல் கொடுப்பதே தமது கட்சியின் நிலைப்பாடு. அவர்களுக்கான உரிமைகளையும், நலன்களையும் மீட்டெடுப்பது குறித்து தாங்கள் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story