தேசிய செய்திகள்

கொல்கத்தாவில் புல்வெளியில் எடுக்கப்பட்டது பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் கிடையாது - மருத்துவர்கள் + "||" + Not newborn skeletons medical waste found at empty plot Kolkata doctors

கொல்கத்தாவில் புல்வெளியில் எடுக்கப்பட்டது பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் கிடையாது - மருத்துவர்கள்

கொல்கத்தாவில் புல்வெளியில் எடுக்கப்பட்டது பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் கிடையாது - மருத்துவர்கள்
கொல்கத்தாவில் புல்வெளியில் எடுக்கப்பட்டது பச்சிளம் குழைந்தைகளின் உடல்கள் கிடையாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தா, 

கொல்கத்தாவில் புல்வெளியில் எடுக்கப்பட்டது பச்சிளம் குழைந்தைகளின் உடல்கள் கிடையாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
தெற்கு கொல்கத்தா நகரின் ஹரிதேப்பூர் பகுதியில் ஒரு ரியல் எஸ்ட்ட நிறுவனம் அண்மையில் வாங்கிய காலி மனை பகுதியில் தூய்மை பணி நடந்தது. அப்போது அங்கிருந்த புல்வெளிக்குள் ஆங்காங்கே 14 பிளாஸ்டிக் பைகள் சிதறிக் கிடந்தன. அவற்றை பணியாளர்கள் பிரித்து பார்த்தபோது துர்நாற்றம் வீசியது. அந்த பைகளுக்குள் 14 பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.  ந்த உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுபற்றி கொல்கத்தா நகரில் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இந்த குழந்தைகளின் உடல்களை பிளாஸ்டிக் பைகளில் சுற்றி இங்கே கொண்டு வந்து போட்டது யார் என்பது பற்றி இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. காலி மனையாக இருந்ததால் இங்கு கொண்டு வந்து குழந்தைகளின் உடல்களை போட்டுச் சென்றுள்ளனர்’’ என்றார். கருகலைப்பு காரணமாக இருக்கலாம் என போலீஸ் விசாரணையை தொடங்கியது. இந்நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது குழந்தைகளின் உடல் கிடையாது, மருத்துவ கழிவுகள் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைகளில் இருந்த பொருட்கள் என்னவென்று பரிசோதனை செய்யப்படுகிறது என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அசாம் மருத்துவமனையில் 6 நாட்களில் 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு : விசாரணைக்கு உத்தரவு
அசாம் மருத்துவமனையில் 6 நாட்களில் 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2. கொல்கத்தா: 6 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது
கொல்கத்தாவில் 6 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
3. கொல்கத்தா: மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து
கொல்கத்தாவில் உள்ள மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
4. கொல்கத்தாவில் பழமையான இரண்டடுக்கு பாலம் இடிந்து விழுந்து விபத்து பலர் சிக்கியுள்ளனர், மீட்பு பணிகள் தீவிரம்
கொல்கத்தாவில் பழமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டுள்ளது, மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
5. வீடு வாடகை தகராறில் சுடு தண்ணீர் பானையில் தள்ளி 2 வயது குழந்தை கொலை
வீடு வாடகை தகராறில் 2 வயது குழந்தை சுடு தண்ணீர் பானையில் தள்ளி கொலை செய்யபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.