ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதவில்லை, இயற்கைக்கு மாறானது - ஆர்.எஸ்.எஸ்


ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதவில்லை, இயற்கைக்கு மாறானது - ஆர்.எஸ்.எஸ்
x
தினத்தந்தி 6 Sep 2018 1:17 PM GMT (Updated: 6 Sep 2018 1:17 PM GMT)

ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதவில்லை எனவும் இயற்கைக்கு மாறானது எனவும் ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துள்ளது.


புதுடெல்லி,


ஆர்.எஸ்.எஸ். உள்பட இந்தியா முழுவதும் உள்ள இந்து அமைப்புகள் தரப்பில் ஓரினச்சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, ஓரினச்சேர்க்கை குற்றமில்லை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை  அளித்துள்ளது. தீர்ப்புக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் அருண் குமார் "சுப்ரீம் கோர்ட்டு தீரப்பை போன்று, நாங்கள் ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதவில்லை. இருப்பினும் ஒரே பாலினத்தில் செய்யப்படும் திருமணம், உறவுகள் இயற்கையானதும் கிடையது, விரும்பத்தக்கதும் கிடையாது. எனவே, இதுபோன்ற உறவுகளை நாங்கள் ஆதரிப்பது கிடையாது, என தெரிவித்துள்ளார். 

Next Story