தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான பாரத் பந்த்: எதிர்க்கட்சிகள் சாலை மற்றும் ரயில் மறியல் + "||" + #BharathBandh: CPI(M) holds protest in #AndhraPradesh's Visakhapatnam against fuel price hike

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான பாரத் பந்த்: எதிர்க்கட்சிகள் சாலை மற்றும் ரயில் மறியல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான பாரத் பந்த்: எதிர்க்கட்சிகள் சாலை மற்றும் ரயில் மறியல்
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான பாரத் பந்த் காரணமாக எதிர்க்கட்சிகள் சாலை மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
புதுடெல்லி,

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதேபோல் இடதுசாரிகள் கட்சிகள் சார்பிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பல இடங்களில் சாலை மற்றும் ரயில் நிலையங்கள் மறியல் நடத்தப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசத்தில் சிபிஐ (எம்) கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒடிசாவில் காங்கிரஸ் கட்சியினர் சம்பல்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் எதிர்க்கட்சிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  பெங்களூருவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து உசிலம்பட்டியில் பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை, வாகன ஓட்டிகள் அவதி
பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
3. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
4. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு - டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உள்ளதாக டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.
5. கரூர் அருகே பெட்ரோல்-டீசல் பதுக்கி வைத்திருந்த குடோனில் தீ விபத்து
கரூர் அருகே பெட்ரோல்- டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.