தேசிய செய்திகள்

பாரத் பந்த்: டெல்லி போராட்டத்தில் ராகுல், சோனியா உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்பு + "||" + Rahul Gandhi Leads Opposition's Bharat Bandh Over Fuel, Rupee

பாரத் பந்த்: டெல்லி போராட்டத்தில் ராகுல், சோனியா உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்பு

பாரத் பந்த்: டெல்லி போராட்டத்தில் ராகுல், சோனியா உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்பு
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதேபோல் இடதுசாரிகள் கட்சிகள் சார்பிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பல இடங்களில் சாலை மற்றும் ரயில் நிலையங்கள் மறியல் நடத்தப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக  கண்டனப்பேரணி நடைபெற்றது. 

இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்கு முன், டெல்லியில் ராஜ்காட்டில்  உள்ள காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  பின்னர் ராஜ்காட்டில் இருந்து ராம்லீலா மைதானம் வரை ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் சென்றனர். ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. 

ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் போராட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்செய் சிங் உள்பட இடதுசாரி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
2. பெட்ரோல் விலை 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்துள்ளது வாகன ஓட்டிகளுக்கு ஆறுதலை அளித்துள்ளது.
3. பெட்ரோல் விலை 17 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகள் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று 80.56க்கு விற்பனையாகிறது.
4. சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.80.73க்கு விற்பனை
சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.80.73க்கு விற்பனை செய்யப்படுகிறது.
5. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைவு, வாகன ஓட்டிகள் நிம்மதி
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறங்கு முகத்தில் உள்ளது வாகன ஓட்டிகளுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.