தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வில் அரசின் பங்கு எதுவும் கிடையாது - பா.ஜனதா சொல்கிறது + "||" + Bharat Bandh No role of government in fuel price hike, says Ravi Shankar Prasad

பெட்ரோல் விலை உயர்வில் அரசின் பங்கு எதுவும் கிடையாது - பா.ஜனதா சொல்கிறது

பெட்ரோல் விலை உயர்வில் அரசின் பங்கு எதுவும் கிடையாது - பா.ஜனதா சொல்கிறது
பெட்ரோல், டீசல் விலை உயர்வில் அரசின் பங்கு எதுவும் கிடையாது என பா.ஜனதா கூறியுள்ளது. #BharathBandh #BJP
புதுடெல்லி,

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்தது. அதன்படி இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது. பீகார், கர்நாடகம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பந்த் காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் அரசின் பங்கு எதுவும் கிடையாது என பா.ஜனதா கூறியுள்ளது.

முழு அடைப்பு போராட்டம் வெற்றியடையவில்லை, போராட்டம் காரணமாக பல்வேறு பகுதிகளில் நேரிட்ட வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவிப்பதாக பா.ஜனதா கூறியுள்ளது. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கஷ்டமான நிலை இருந்தபோதிலும் மக்கள் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதில் பா.ஜனதா வலுவான நம்பிக்கையை கொண்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் விரக்தியால் போராட்டம் நடக்கிறது. முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை மக்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் உள்ளது.பெட்ரோல், டீசல் விலை உயர்வில் அரசின் பங்கு எதுவும் இல்லையென்று மக்களுக்கு தெரியும், வெளிக்காரணி காரணமாகவே விலை உயர்வு உள்ளது. முழுஅடைப்பு போராட்டத்தில் மக்கள் ஏன் வேற்றுமையை கொண்டிருக்கிறார்கள்? விலை உயர்வு தற்காலிகமாக இருந்தாலும், அவைகளுக்கான காரணிகள் இந்திய அரசிற்கு அப்பாற்பட்டது என்று அவர்களுக்கு தெரியும். எல்லோருக்கும் போராட்டம் நடத்த உரிமையுள்ளது, ஆனால் இன்று என்ன நடந்துள்ளது? பெட்ரோல் நிலையங்கள், பஸ்கள் தீ வைக்கப்பட்டுள்ளது, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

பீகார் மாநிலம் ஜகானாபாத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று போராட்டம் காரணமாக மருத்துவமனை நோக்கி செல்ல முடியாததால் குழந்தை உயிரிழந்து உள்ளது. அதற்கு யார் பொறுப்பு? என கேள்வி எழுப்பியுள்ளார். 

இதற்கிடையே பீகாரில் குழந்தை உயிரிழந்தது ஆம்புலன்ஸ் போராட்ட கும்பலால் சாலையில் சிக்கியதால் கிடையாது. குழந்தையின் உயிரிழப்புக்கும், முழு அடைப்பு போராட்டத்திற்கும் எந்தஒரு தொடர்பும் கிடையாது. அவர்களுடைய உறவினர்கள் வீட்டிலிருந்தே மிகவும் காலதாமதமாக வெளியேறியுள்ளனர் என மறுப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு : வாகன ஓட்டிகள் அவதி
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
2. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகத்தில் பா.ம.க. 5-ந் தேதி போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகத்தில் பா.ம.க. சார்பில் 5-ந் தேதி போராட்டம் நடைபெறும் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
3. பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து சர்ச்சை கருத்து - மத்திய மந்திரி வருத்தம் தெரிவித்தார்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த மத்திய மந்திரி வருத்தம் தெரிவித்தார்.
4. பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் - பா.ஜனதா தலைவர் அமித்ஷா
பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.
5. பெட்ரோல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: ரிசர்வ் வங்கி கவர்னருடன் பிரதமர் ஆலோசனை
பெட்ரோல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றி ரிசர்வ் வங்கி கவர்னருடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.