தேசிய செய்திகள்

மேகதாது அணை கட்ட அனுமதிக்குமாறு பிரதமர் மோடியிடம் குமாரசாமி நேரில் கோரிக்கை + "||" + Karnataka CM meets PM Narendra Modi over proposed Mekedatu reservoir

மேகதாது அணை கட்ட அனுமதிக்குமாறு பிரதமர் மோடியிடம் குமாரசாமி நேரில் கோரிக்கை

மேகதாது அணை கட்ட அனுமதிக்குமாறு பிரதமர் மோடியிடம் குமாரசாமி நேரில் கோரிக்கை
மேகதாது அணை கட்ட அனுமதிக்குமாறு பிரதமர் மோடியிடம் குமாரசாமி நேரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி,

 கர்நாடகா அரசு காவிரியில் 5-வது அணையாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது.
 
ஏற்கனவே கர்நாடகா தண்ணீர் திறந்துவிடுவதில்லை. மேகதாது அணை கட்டினால் உபரி நீர் திறந்து விடுவது சந்தேகம்தான். எனவே கர்நாடகாவை மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் மேகதாது அணை கட்ட அனுமதிக்குமாறு பிரதமர் மோடியிடம் குமாரசாமி நேரில் கோரிக்கை விடுத்துள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் தமிழக, கர்நாடக அரசுகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

காலதாமதம் செய்யாமல் மேகதாது அணையை கட்ட மத்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும், தமிழக அரசுடனான அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 

சமீபத்தில் இதுகுறித்து பேசிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் பேசுகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதலை பெற அவசியம் இல்லை என கூறியிருந்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் முடிவை கைவிட வேண்டும் : எடியூரப்பாவுக்கு குமாரசாமி எச்சரிக்கை
ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் முடிவை கைவிட வேண்டும். இல்லையெனில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வுடன் குதிரை பேரத்தில் ஈடுபட்ட ஆதாரத்தை வெளியிடுவேன் என எடியூரப்பாவுக்கு குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2. சிருங்கேரி சாரதா பீடத்தில் குமாரசாமி சிறப்பு யாகம்
ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் சிருங்கேரி சாரதா பீடத்தில் குமாரசாமி தனது குடும்பத்தினருடன் யாகம் நடத்தி வழிபட்டார். இதில் தந்தை தேவேகவுடா, சகோதரர் ரேவண்ணாவும் கலந்து கொண்டனர்.
3. மாநில மக்களிடம் குமாரசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் : எடியூரப்பா வலியுறுத்தல்
வருமான வரித்துறை அதிகாரியை சந்தித்ததாக கூறிய விவகாரத்தில் மாநில மக்களிடம் குமாரசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எடியூரப்பா வலியுறுத்தினார்.
4. மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு தமிழகத்தின் ஒப்புதலை பெற தேவை இல்லை - கர்நாடக மந்திரி
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
5. நிர்மலா சீதாராமன் சர்ச்சைக்குரிய பேச்சு: சிறிய வேறுபாட்டை மறந்துவிட்டு, பரஸ்பரம் மன்னித்துக்கொள்வோம் குமாரசாமி கருத்து
குடகில் ராணுவ மந்திரி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்–மந்திரி குமாரசாமி, இது துரதிர்ஷ்டவசமான நிகழ்வு என கூறி இருக்கிறார்.