தேசிய செய்திகள்

2 நாள் சுற்றுப்பயணமாக சுஷ்மா சுவராஜ் ரஷியா சென்றார் + "||" + 2 day tour Sushma Swaraj went to Russia

2 நாள் சுற்றுப்பயணமாக சுஷ்மா சுவராஜ் ரஷியா சென்றார்

2 நாள் சுற்றுப்பயணமாக சுஷ்மா சுவராஜ் ரஷியா சென்றார்
வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 2 நாள் பயணமாக ரஷியா சென்றார்.

புதுடெல்லி, 

வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 2 நாள் பயணமாக ரஷியா சென்றார்.

ரஷியா சென்றார்

இந்தியாவும், ரஷியாவும் சிறப்புவாய்ந்த, பெருமைக்குரிய நட்புறவு கொண்டுள்ள நாடுகள். கடந்த மே மாதம் பிரதமர் மோடி ரஷியா சென்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுடன் சாதாரண முறையில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று ரஷியா புறப்பட்டு சென்றார். தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான இந்திய–ரஷிய அரசுகளுக்கு இடையேயான ஆணையத்தின் 2 நாள் கூட்டம் ரஷியாவின் மாஸ்கோ நகரில் நேற்று தொடங்கியது. இதில் சுஷ்மா சுவராஜ் பங்கேற்கிறார்.

நல்லுறவு நடவடிக்கைகள்

அங்கு ரஷிய கூட்டமைப்பின் துணை பிரதமர் யுரி போரிசோவ் உடன் சுஷ்மா சுவராஜ் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த ஆணையத்தின் கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த கூட்டம் டெல்லியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கூட்டத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், முதலீடு, அறிவியல், தொழில்நுட்பம், கலாசாரம் மற்றும் பரஸ்பர நலன்கள் தொடர்பான இதர பிரச்சினைகளில் உள்ள நல்லுறவு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்யப்படும். இந்த நடவடிக்கைகளின் தற்போதைய நிலையை ஆய்வு செய்த பின்னர் இதில் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அவற்றுக்கு தீர்வுகாணும் வழிமுறைகள், கொள்கைரீதியான பரிந்துரைகள் வழங்கப்படும்.

புதின் வருகிறார்

ரஷிய அதிபர் புதின் அடுத்த மாதம் 5–ந் தேதி இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருநாட்டு உறவுகள் தொடர்பான 19–வது இந்திய–ரஷிய பேச்சுவார்த்தை டெல்லியில் புதின், பிரதமர் நரேந்திர மோடி இடையே நடக்கிறது.

இதில் கலந்துகொள்வதற்காக புதின் இந்தியா வருகைதர உள்ள நிலையில் சுஷ்மா சுவராஜ் ரஷியா சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.