விஜய் மல்லையா லண்டன் தப்ப போகிறார் என்பது குறித்து எச்சரித்த சுப்ரீம் கோர்ட் வக்கீல்


விஜய் மல்லையா லண்டன் தப்ப போகிறார் என்பது குறித்து எச்சரித்த சுப்ரீம் கோர்ட் வக்கீல்
x
தினத்தந்தி 14 Sep 2018 11:40 AM GMT (Updated: 14 Sep 2018 11:40 AM GMT)

விஜய் மல்லையா லண்டன் தப்ப போகிறார் என்பது குறித்து தெரிந்து எஸ்பிஐ வங்கி இயக்குனரையும், மத்திய அரசின் அதிகாரிகளையும் எச்சரித்த சுப்ரீம் கோர்ட் வக்கீல்.

புதுடெல்லி,

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பவர் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா.

வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்தாமல், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார்.

மல்லையாவை நாடு கடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்கக்கோரி, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டனில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா, உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் மல்லையா, ஜெனீவாவில் ஒரு கூட்டத்தில் பங்கேற்க வேண்டி இருந்ததால், நான் நாட்டை விட்டு வெளியேறினேன். வெளியேறும் முன்பு, நிதி மந்திரியை சந்தித்தேன். வங்கிகளுடனான பிரச்சினையை தீர்க்க தயாராக இருப்பதாக மீண்டும் தெரிவித்தேன். இது உண்மை என கூறினார்.

இதனை தொடர்ந்து அருண் ஜெட்லிக்கும், மல்லையாவுக்கும் இடையே தொடர்பு உள்ளது என ராகுல் காந்தி குற்றச்சாட்டு கூறினார்.  இதற்காக ஜெட்லி பதவி விலக வேண்டும்.  இதுபற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில், ராகுல் காந்தியை பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பு நிர்வாகி சாம்பிட் பத்ரா கடுமையாக சாடி பேசினார்.  அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது, காங்கிரஸ் தலைவருக்கு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் தொடர்பு உள்ளது.

இதை தொடர்ந்து காங்கிரசும் - பாரதீய ஜனதாவும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர்

இந்நிலையில் இது குறித்து பேசிய சுப்ரிம் கோர்ட்  வழக்கறிஞர் துஷ்யந்த்தாவே கூறுகையில், மல்லையா லண்டன் போகவுள்ளார் என முன்பே தெரியும்.

இதையடுத்து எஸ்பிஐ வங்கி இயக்குனரையும், மத்திய அரசின் அதிகாரிகளையும் அணுகி மல்லையா வெளிநாடு செல்ல உள்ளார், அதை தடுக்கும்படியும் கூறினேன். அதேபோல் மறுநாள், நான் உங்களுக்காக வழக்கில் ஆஜராகிறேன் என எஸ்பிஐ இயக்குனரிடம் கூறினேன். அதற்கு எஸ்பிஐ அதிகாரிகள் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மறுநாள் நீதிமன்றம் பக்கமே வரவில்லை. இந்த நிலையில் தான் மல்லையா லண்டனுக்கு பறந்தார். அப்போதே தான் சொன்னதை கேட்டு இருந்தால் மல்லையா தப்பித்து இருக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.

Next Story