தேசிய செய்திகள்

கர்ப்பிணி மனைவி முன்னால் கணவர் வெட்டிக் கொல்லப்பட்ட கொடூரம் + "||" + Horrific murder in Telangana, man hacked to death in front of pregnant wife

கர்ப்பிணி மனைவி முன்னால் கணவர் வெட்டிக் கொல்லப்பட்ட கொடூரம்

கர்ப்பிணி மனைவி முன்னால் கணவர் வெட்டிக் கொல்லப்பட்ட கொடூரம்
கர்ப்பிணி மனைவி முன்னால் கணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.

ஐதராபாத்,

தெலங்கானா மாநிலம் நல்கொண்டாவை சேர்ந்த ப்ரனய் பெருமல்லா, அம்ருதாவிற்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாகதான் திருமணம் நடைபெற்றுள்ளது. ப்ரனய் பெருமல்லா தன்னுடைய மனைவி அம்ருதாவுடன் அங்குள்ள ஜோதி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார். அம்ருதா மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கிறார், அவரை பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனையில் இருந்து வெளியேறிய போது அடையாளம் தெரியாத மர்ம நபர், பெருமல்லாவை கொடூரமான முறையில் தாக்கியுள்ளார்.

 இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடக்கிறது என்று யோசிக்கும் முன்பே மர்மநபர், பெருமல்லாவை வெட்டிக் கொலை செய்துள்ளார். அருகிலிருந்தவர்களின் உதவியை கோரும் அம்ருதா, மருத்துவமனைக்குள் வேகமாக ஓடும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருமல்லா எஸ்.சி. பிரிவை சேர்ந்தவர் என்றும் அம்ருதா உயர் வகுப்பை சேர்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சந்திரசேகர ராவின் மூன்றாவது கூட்டணிக்கு பின்னால் பிரதமர் மோடியின் தந்திரம் -சந்திரபாபு நாயுடு
சந்திரசேகர ராவின் மூன்றாவது கூட்டணிக்கு பின்னால் பிரதமர் மோடியின் தந்திரம் உள்ளது என சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
2. தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வெட்டிக்கொலை: சிறுவன் உள்பட 7 பேர் கைது; அண்ணன் மனைவிக்கு வலைவீச்சு
தி.மு.க. முன்னாள் கவுன்சிலரை சொத்து தகராறில், அவருடைய உறவினர்களே தீர்த்து கட்டியது போலீசார் நடத்திய விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இந்த வழக்கில் சிறுவன் உள்பட 7 பேரை கைது செய்துள்ள போலீசார், அவருடைய அண்ணன் மனைவியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
3. மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்
தெலுங்கானாவில் மெகா கூட்டணி தோல்வியை தழுவியது என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
4. ராஜஸ்தான், தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: 7-ந்தேதி வாக்குப் பதிவு
ராஜஸ்தான் (200 தொகுதிகள்) மற்றும் தெலுங்கானா(119 தொகுதிகள்) ஆகிய 2 மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.
5. சட்டசபைத்தேர்தல்: தெலுங்கானாவில் இதுவரை ரூ.99.5 கோடி பறிமுதல்
சட்டசபைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தெலுங்கானாவில் இதுவரை ரூ.99.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.