காந்தியடிகளின் கனவுகளை நிறைவேற்றுவதே தூய்மையே சேவை இயக்கத்தின் இலக்கு - பிரதமர் மோடி


காந்தியடிகளின் கனவுகளை நிறைவேற்றுவதே தூய்மையே சேவை இயக்கத்தின் இலக்கு - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 15 Sep 2018 6:28 AM GMT (Updated: 15 Sep 2018 6:28 AM GMT)

காந்தியடிகளின் கனவுகளை நிறைவேற்றுவதே தூய்மையே சேவை இயக்கத்தின் இலக்கு என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக புதிய தூய்மை திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. ‘தூய்மையே உண்மையான சேவை’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு புதிய தூய்மை திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதனை முன்னிட்டு நமோ ஆப் மூலம் அவர் பேசியதாவது:

தூய்மை இந்தியா என்ற மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றுவதே புதிய திட்டத்தின் இலக்கு. இன்று முதல் காந்தி பிறந்த நாள் வரை மகாத்மாவின் கனவை நிறைவேற்ற நம்மை அர்ப்பணித்து கொள்வோம். 4 வருடத்திற்கு முன் ஆரம்பிக்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் இன்று முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. காந்தியடிகளின் கனவுகளை நிறைவேற்றுவதே தூய்மையே சேவை இயக்கத்தின் இலக்கு.

இந்த திட்டத்தில் ஏராளமான மக்கள் தங்களை அர்ப்பணித்து கொண்டுள்ளனர் என்பதை பெருமையாக நாம் கருதலாம். தூய்மை இந்தியா திட்டத்தில் பெண்களின் பங்களிப்பு அளப்பரியது. சமூக மாற்றத்திற்கான தூதர்களாக இளைஞர்கள் திகழ்கின்றனர். தூய்மை குறித்து அவர்கள் செய்த பணி பாராட்டுக்குரியது. இந்தியாவில் நேர்மறையான மாற்றத்தில் இளைஞர்கள் பங்கு அதிகம் உள்ளது. தூய்மையான இந்தியா நோய்களை விரட்டும். அனைவரும் இந்த திட்டத்தில் இணைய வேண்டும் என அழைக்கிறேன். தேசத்தை தூய்மையாக வைத்து கொள்ள உறுதியேற்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story