தேசிய செய்திகள்

வேலையில்லாத, விரக்தியடைந்த இளைஞர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர் - பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு + "||" + Unemployed, frustrated young men engage in sex crimes - BJP MLA controversy

வேலையில்லாத, விரக்தியடைந்த இளைஞர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர் - பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

வேலையில்லாத, விரக்தியடைந்த இளைஞர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர் - பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு
வேலைவாய்ப்பு இல்லாத, விரக்தியடைந்த வாலிபர்களால், பாலியல் குற்றங்கள் நடந்து வருவதாக பாஜக பெண் எம்.எல்.ஏ. கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகர்,

ஹரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் மாணவி ஒருவர் 12 நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஹரியானா மாநில பா.ஜ.க. தலைவரும், உச்சானா கலான் பெண் எம்.எல்.ஏ.-வுமான பிரேமலதா, வேலையில்லாதவர்கள் மற்றும் விரக்தியடைந்த இளைஞர்கள், கற்பழிப்பு போன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என்று கூறினார்.


பாலியல் சம்பவம் தொடர்பாக சண்டிகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய பிரேமலதா, ‘இளைஞர்களில் பலர் வேலையில்லாமலும், விரக்தியடைந்தும் உள்ளனர். அவர்கள் சமூகத்தில் மிகவும் மோசமான இது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் என்று கூறினார். இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று போலீஸ் சூப்பிரெண்டு நாஜினீன் பாசின், பாதிக்கப்பட்ட பெண்ணை ரேவாரி மாவட்ட மருத்துவமனைக்கு சென்று சந்தித்தார். அந்த பெண்ணின் புகார் குறித்து கேட்டறிந்தார். பின்னர் இது குறித்து பாசீன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "இன்று நான் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேசியிருக்கிறேன். அவளுடைய நிலைமை தற்போது சீரடைந்துள்ளது, முக்கிய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாங்கள் வழக்கு குறித்த ஒவ்வொரு அம்சத்தையும் விசாரணை செய்து  செய்கிறோம். இந்த வழக்கில் தகவல் கொடுக்கும் நபருக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும்” என்று கூறினார்.

இந்நிலையில், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் ராணுவ வீரர் உள்பட 3 பேரில் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். இதில் மனிஷ், நிசு, ராணுவ வீரர் பன்கஜ் ஆகியோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.