தேசிய செய்திகள்

மராட்டியத்தில் பயங்கரம்; பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிகளில் ஒருவர் உயிரிழப்பு + "||" + One of two minor rape victims in Pune dies

மராட்டியத்தில் பயங்கரம்; பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிகளில் ஒருவர் உயிரிழப்பு

மராட்டியத்தில் பயங்கரம்; பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிகளில் ஒருவர் உயிரிழப்பு
மராட்டியத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிகளில் ஒருவர் உயிரிழந்தார், போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
புனே,

பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக அரசு சட்டத்தை வலுப்படுத்தினாலும் இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டுதான் வருகிறது. மராட்டிய மாநிலம் புனேவின் ஹின்ஜேவாடி பகுதியில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளனர். நேற்று மாலையில் கிராமத்தில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமிகளுக்கு சாக்லேட் கொடுத்து ஏமாற்றி இளைஞர்கள் இருவர் இந்த கொடூரமான செயலை செய்துள்ளனர். பலாத்காரம் தொடர்பாக வீட்டில் தகவல் தெரிவித்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என சிறுமிகளை அவர்கள் மிரட்டியுள்ளனர். 

பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பெற்றோர்களுக்கு சம்பவம் தெரியவந்துள்ளது. சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கோமாவில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் நேற்று இரவு 11 மணியளவில் உயிரிழந்துவிட்டார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களையும் போலீஸ் கைது செய்துள்ளது.

 போஸ்கோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரித்து வருகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
2. சினிமாவில் பலாத்காரம் இல்லை: “பாலியல் சம்பவங்கள் சம்மதத்துடன்தான் நடக்கிறது” - நடிகை ஷில்பா ஷிண்டே
பாலியல் சம்பவங்கள் சம்மதத்துடன்தான் நடக்கிறது நடிகை ஷில்பா ஷிண்டே தெரிவித்துள்ளார்.
3. கென்யாவில் 7 மாத கர்ப்பமான காதலியை கொலை செய்த கவர்னர் கைது
கென்யாவில் 7 மாத கர்ப்பமான காதலியை கொலை செய்த கவர்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
4. விநாயகர் சதுர்த்தியன்று சாமி கும்பிட சென்ற சிறுமி பலாத்காரம், போலீஸ் விசாரணை
மராட்டியத்தில் விநாயகர் சதுர்த்தியன்று சாமி கும்பிட சென்ற சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.
5. தேவாலயத்திற்கு எதிரான சதிதிட்டம் கன்னியாஸ்திரியின் பலாத்கார குற்றச்சாட்டுக்கு பாதிரியார் பிராங்கோ மறுப்பு
கன்னியாஸ்திரியின் பலாத்கார குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள பாதிரியார் பிராங்கோ, தேவாலயத்திற்கு எதிரான சதிதிட்டம் என குற்றம் சாட்டியுள்ளார்.