தேசிய செய்திகள்

ராமர் கோவிலை மறந்துவிட்டு இஸ்லாமிய பெண்களின் வழக்கறிஞராகியுள்ளார் மோடி -பிரவீன் தொகாடியா விமர்சனம் + "||" + Modi govt has forgotten Lord Ram Togadia

ராமர் கோவிலை மறந்துவிட்டு இஸ்லாமிய பெண்களின் வழக்கறிஞராகியுள்ளார் மோடி -பிரவீன் தொகாடியா விமர்சனம்

ராமர் கோவிலை மறந்துவிட்டு இஸ்லாமிய பெண்களின் வழக்கறிஞராகியுள்ளார் மோடி -பிரவீன் தொகாடியா விமர்சனம்
பிரதமர் மோடி, ராமர் கோவில் கட்டுவதை மறந்துவிட்டு இஸ்லாமிய பெண்களின் வழக்கறிஞராகியுள்ளார் என பிரவீன் தொகாடியா விமர்சனம் செய்துள்ளார்.
ருத்ராபூர்,

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா இப்போது அந்தரஷ்ட்ரியா இந்து பரிஷத் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவருடைய அமைப்பின் சார்பில் அக்டோபர் 21-ம் தேதி லக்னோவில் இருந்து அயோத்தியாவிற்கு பேரணி நடைபெறும் என கூறியுள்ளார்.
 
ஹால்டுவானி செய்தியாளர்களிடம் பேசிய தொகாடியா,  “பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும், கல்வி எளிமையாக அனைவருக்கும் கிடைக்க வேண்டும், கோடிக்கணக்கான இளைஞர்களுக்கும் வேலை கிடைக்கும், பெட்ரோல் விலை குறைந்தது, விவசாயிகள் தங்கள் கடன்களை திருப்பி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம் ஆனால் மோடி அரசு அதனையெல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டது” என கூறியுள்ளார். ராமர் கோவில் கட்டும் விவகாரத்தை மறந்து, மோடி முத்தலாக் விவகாரத்தில் இஸ்லாமிய பெண்களின் வழக்கறிஞராகியுள்ளார் என விமர்சனம் செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடியின் நீண்ட கால குற்றச்சாட்டு பிரச்சாரத்திற்கு பிரியங்கா பதிலடி
பிரதமர் மோடியின் நீண்ட கால காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டு பிரச்சாரத்திற்கு பிரியங்கா காந்தி பதிலடியை கொடுத்துள்ளார்.
2. ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை வைத்து மோடி ஓட்டு வாங்க நினைக்கிறார் - காங்கிரஸ் தேசிய செயலாளர் குற்றச்சாட்டு
ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை வைத்து பிரதமர் மோடி ஓட்டு வாங்க நினைக்கிறார் என காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் கூறினார்.
3. ரபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் இன்னும் நிறைய சாதித்து இருக்கலாம் : பிரதமர் பேச்சு
இந்தியாவிடம் ரபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் இன்னும் நிறைய சாதித்து இருக்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
4. மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், ராணுவ வீரர்களின் தியாகத்தை அரசியலுக்கு பயன்படுத்துகிறார் மோடி
ராணுவ வீரர்களின் தியாகத்தை அரசியலுக்கு மோடி பயன்படுத்து கிறார் என்று கோவையில் நடந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத் குற்றம் சாட்டினார்.
5. பிரதமர் மோடி 1-ந் தேதி குமரி வருகை மேடை அமைக்கும் பணிகளை பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்
குமரிக்கு பிரதமர் மோடி மார்ச் 1-ந் தேதி வருகிறார். இதனையொட்டி நடந்து வரும் மேடை அமைக்கும் பணிகளை பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.