தித்லி புயல்: ஒடிசாவில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை வானிலை மையம் தகவல்


தித்லி புயல்: ஒடிசாவில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை வானிலை மையம் தகவல்
x
தினத்தந்தி 10 Oct 2018 6:03 AM GMT (Updated: 10 Oct 2018 6:03 AM GMT)

தித்லி புயல் காரணமாக ஒடிசாவில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று ஒடிசா வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புவனேஷ்வர்,

வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி உள்ளதால் ஒடிசா மற்றும் ஆந்திராவிற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  தித்லி புயல் காரணமாக ஒடிசாவில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று ஒடிசா வானிலை மையம் தெரிவித்துள்ளது.

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவில் உள்ள கஜபதி, கன்ஜம், புரி, ஜகத்சிங்பூர் ஆகிய 4 மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை இன்றும், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  புயல் காரணமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க ஒடிசா அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 மாநிலம் முழுவதும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Next Story