இந்தியாவில் பாலியல் இணையதளங்களைப் பார்ப்பவர்களுக்கு ஆபத்து? பணம் கேட்டு மிரட்டும் புதிய சைபர் கிரைம் கும்பல்


இந்தியாவில் பாலியல் இணையதளங்களைப் பார்ப்பவர்களுக்கு ஆபத்து? பணம் கேட்டு மிரட்டும் புதிய சைபர் கிரைம் கும்பல்
x
தினத்தந்தி 10 Oct 2018 8:19 AM GMT (Updated: 10 Oct 2018 8:19 AM GMT)

பாலியல் இணையதளங்களைப் பார்ப்பவர்களின் அந்தரங்க தகவல்களை திருடி அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டும் புதிய சைபர் கிரைம் இந்தியாவுக்குள் வந்துள்ளது.

செக்ஸ்டார்ஸன் (sexstarsan) என்று அழைக்கப்படும் இந்த சைபர் குற்றம் இதற்கு முன் வெளிநாடுகளில் மட்டுமே இருந்து வந்தது. தற்போது முதல்முறையாக இந்தியாவுக்குள் வந்துள்ளது என்று மும்பை போலீஸார் தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் செக்ஸ்டார்ஸன்  எனப்படும் இத்தகைய வழக்குகள் அதிகரித்து வருவதாக  கூறி உள்ளனர். இதுபற்றி ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட் நிறுவனம் ஒரு ஆய்வு வெளியிட்டது. 'செக்ஸ்' என்பது உண்மையான வார்த்தை அல்ல, ஆனால் குற்றவாளிகளுக்கு இந்தக் குற்றச்சாட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷன் ஆய்வின் படி  சமீபத்திய ஆண்டுகளில் 78 வழக்குகள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த 78 வழக்குகள் 29 அமெரிக்க மாநிலங்களில் மற்றும் பிரதேசங்களில்  பதிவு செய்யப்பட்டு உள்ளன. 3 வழக்குகள் வெளிநாட்டு அதிகார எல்லைகளாக உள்ளன. ஆய்வின் படி 78 வழக்குகளில் 1,379 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை  கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த 78 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000 முதல் 6500 வரை இருக்கலாம்.

செக்ஸ்டார்ஸன் எனப்படுவது பாலியல் இணையதளங்களைப் பார்க்கும் செயலுக்கு அடிமையானவர்களை அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் தனிப்பட்ட விவரங்கள், அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோ  ஆகியவற்றை  திருடி மிரட்டி பணம் பறிக்கும் முறையாகும். சில நேரங்களில் பாலியல் தேவைக்கும் அவர்களைப் பயன்படுத்துவார்கள். ஹேக்கிங் முறையில் இந்த செக்ஸ்டார்ஸன் குற்றம் நடக்கிறது.

இந்த குற்றத்தால்  பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் இளம் வயதினர். இத்தகைய குற்றங்களை நிகழ்த்தும் குற்றவாளிகள் பெரும்பாலும் ஆண்களாக உள்ளனர். வயது வந்தோர்களில் அதிகமான பெண்கள் உள்ளனர். இத்தகைய தாக்குதல்களுக்கு  பாதிக்கப்பட்டவர்கள் அவமானம் காரணமாக அமைதியாக இருக்கிறார்கள்.

கடந்த 2 மாதங்களில் மும்பை சைபர் கிரைம் போலீஸாரிடம் 5 பேர் செக்ஸ்டார்ஸன் புகார் அளித்துள்ளனர். அதாவது, பாலியல் இணையதளங்களை பார்த்துப் பழகிய இந்த 5 பேரின் தனிப்பட்ட விவரங்களைத் திருடி பணம் கேட்டு மிரட்டுவதால் அச்சமடைந்து போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து மும்பை போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

செக்ஸ்டார்ஸன் என்பது பாலியல் இணையதளங்களைப் பார்ப்பவர்களை குறிவைத்துத் தாக்கப்படும் முறையாகும். இது பல வகைப்படும். பாலியல் இணையதளங்கள் பார்ப்பவர்களிடம் சாட்டிங்கில் ஈடுபட்டு அவர்களிடம் இருந்து புகைப்படங்கள், தனிப்பட்ட விவரங்களைக் கேட்டுப் பெற்று மிரட்டலில் ஈடுபடுவதாகும்.

சிலநேரங்களில் பாலியல் இணையதளங்களில் சில "லிங்குகளை" இணைத்து அதன் மூலம் பாலியல் இணையதளங்கள் பார்ப்பவர்களின் தனிப்பட்ட விவரங்கள், புகைப்படங்களைத் திருடுவதாகும். இதில் விவரங்கள் ஏதும் கிடைத்துவிட்டால் பாலியல் இணையதளத்துக்கு அடிமையாளர்களிடம் பணத்தைக் கேட்டு மிரட்டலாம் அல்லது பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தலாம்.

அந்த வகையில் 2 பெண்கள், 3 ஆண்கள் இந்த விஷயத்தில் சிக்கியுள்ளனர். இவர்களிடம் பணம் கேட்டு இணையதளம் வாயிலாக மிரட்டுகின்றனர், பணத்தை "பிட்காயின்களாக" தர வேண்டும் என்றும் இல்லாவிட்டால், தனிப்பட்ட தகவல்களை கேட்டு மிரட்டுகின்றனர்.  அந்தரங்க புகைப்படங்களை இணையதளத்தில் பரப்பிவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

இவர்கள் 5 பேரும் பாலியல் இணையதளங்களைப் பார்க்கும்போது, சில லிங்குகளை கிளிக் செய்துள்ளனர். அதன்பின் சில நாட்களில் அவர்களுக்கு மின்அஞ்சல் வந்துள்ளது. அதில் அவர்களின் பெயர், தனிப்பட்டவிவரங்கள், புகைப்படங்கள் போன்றவற்றை பதிவிட்டு மிரட்டலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த 5 பேரும் போலீஸில் புகார் அளிக்க மறுத்துவிட்டாலும், தங்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இப்போதுள்ள நிலையில் 5 பேர் மட்டுமே மும்பையில் துணிச்சலாக வெளிவந்து இந்த புகாரை அளித்துள்ளனர். ஆனால், பாலியல் இணையதளங்களைப் பார்ப்பவர்கள் பலரின் தனிப்பட்ட விவரங்களும் இதில் எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் வெளியே சொல்ல முடியாமல் உள்ளனர்.

இதில் ஒருவர் ஏற்கனவே பிட்காயின்களாக அனுப்ப முயற்சித்து, அதில் தோல்வி அடைந்து பல லட்சங்களை இழந்தபின் போலீஸாரை அணுகியுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே தொடர்ந்து வந்த புதுவகையான சைபர்கிரைம் இப்போது இந்தியாவில் வந்து விட்டது எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே பாலியல் இணையதளங்களைப் பார்ப்பவர்களின் தனிப்பட்டவிவரங்கள் எப்படித் திருடப்படுகின்றன, எவ்வாறு ஹேக் செய்யப்படுகின்றது என்பது குறித்த விசாரணையில் சைபர் கிரைம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 5 பேரும் போலீஸாரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்காத காரணத்தால் விசாரணையின் கோணம் குறித்து வெளியே கூற போலீஸார் மறுத்து விட்டனர்.

இதற்கு ஒரு கடுமையான சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று  நிபுணர்கள் கூறுகிறார்கள். அதில் பாலியல் துஷ்பிரயோகம், பழக்கவழக்கம், குழந்தை ஆபாசம் போன்றவை அடங்கும்.

Next Story