தேசிய செய்திகள்

பாலியல் உறவுக்கு சம்மதிக்குமாறு பெண் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை + "||" + Sexual relationship Consent the girl is intimidated the suicide of the young man

பாலியல் உறவுக்கு சம்மதிக்குமாறு பெண் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை

பாலியல் உறவுக்கு சம்மதிக்குமாறு பெண் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை
பாலியல் உறவுக்கு சம்மதிக்குமாறு பெண் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை,

மராட்டிய மாநிலம் பர்பானி மாவட்டம் பர்பானியில் ஒரு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தவர் சச்சின் மிட்காரி (வயது 38). இவர், தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். அதைப் பார்த்து பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


அந்த வீட்டில், சச்சின் மிட்காரி தனது கைப்பட எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், தன்னுடன் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் ஒரு பெண்ணின் பாலியல் துன்புறுத்தலால், தற்கொலை செய்துகொள்வதாக மிட்காரி எழுதி இருந்தார்.

தான் திருமணம் ஆனவன் என்று தெரிந்தும், தன்னை பாலியல் உறவுக்கு வருமாறு அந்த பெண் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், சம்மதிக்க மறுத்தால், பொய் புகார் கொடுப்பதாக ‘பிளாக்மெயில்’ செய்து வருவதாகவும் அவர் எழுதி இருந்தார்.

இதன் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டியதாக அந்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தொடர்புடைய செய்திகள்

1. வளசரவாக்கத்தில் தற்கொலை செய்வதாக மிரட்டிய மனைவியை தீ வைத்து எரித்த கணவர்
வளசரவாக்கத்தில் தீக்குளித்து தற்கொலை செய்வதாக மிரட்டிய மனைவியை அவரது கணவர் தீ வைத்து எரித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவான கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. தொழிலதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு நிழலுலக தாதா ரவி பூஜாரி மிரட்டல்
மகாராஷ்டிராவில் ரூ.1 கோடி கேட்டு நிழலுலக தாதா ரவி பூஜாரி மிரட்டல் விடுத்துள்ளார் என தொழிலதிபர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
3. ஜார்க்கண்டில் மாவோயிஸ்டு என கூறி ஆசிரியரிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய நபர் கைது
ஜார்க்கண்டில் மாவோயிஸ்டு என கூறி பள்ளி ஆசிரியரிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
4. மதுபாட்டிலால் குத்தி வாலிபர் படுகொலை - தனியார் நிறுவன ஊழியர் கைது
வலங்கைமான் அருகே மதுபாட்டிலால் குத்தி வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
5. கொடுமுடிக்கு தீர்த்தம் எடுக்க வந்த வாலிபர் காவிரி ஆற்றில் மூழ்கி சாவு
கொடுமுடிக்கு தீர்த்தம் எடுக்க வந்த வாலிபர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்தார்.