தேசிய செய்திகள்

செல்போனில் சொக்க வைத்து கட்டிப்போட்ட ஸ்வீட் வாய்ஸ்: நேரில் பார்த்த 15 வயது சிறுவன் ஷாக்! + "||" + Wrong phone call leads to marriage of teenage Goalpara boy with 60-year-old woman!

செல்போனில் சொக்க வைத்து கட்டிப்போட்ட ஸ்வீட் வாய்ஸ்: நேரில் பார்த்த 15 வயது சிறுவன் ஷாக்!

செல்போனில் சொக்க வைத்து கட்டிப்போட்ட ஸ்வீட் வாய்ஸ்: நேரில் பார்த்த 15 வயது சிறுவன் ஷாக்!
அசாமில் தவறான செல்போன் எண்ணில் பேசிய குரலால் ஈர்க்கப்பட்ட 15 வயது சிறுவனுக்கு, செல்போனில் பேசிய 60 வயது மூதாட்டியைத் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்த சம்பவம் நடந்துள்ளது.
கவுகாத்தி,

அசாம் மாநிலம் கோல்பரா மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் படிக்காத காரணத்தினால் கட்டிட வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன் வேலையில்லாத நேரத்தில் நண்பருடன் பேச நினைத்து செல்போனில் நம்பரை போட்டுள்ளார். ஆனால் நண்பனுக்கு பதிலாக வேறு ஒரு எண்ணிற்கு போய்விட்டது. அந்த போன் ஒரு பெண் எடுத்து பேசி உள்ளார். 

தவறான எண் என அந்த பெண் கூறியும் சிறுவனால் போனை கட் செய்ய முடியவில்லை. காரணம் போனில் பேசிய குரலில் அப்படி ஒரு இனிமை. குரலை கேட்க கேட்க சிறுவனுக்கு ஒரு வித ஆனந்தம் தோன்றியது. அதனால் அடிக்கடி அந்த பெண்ணுக்கு செல்போனில் பேசி உள்ளார்.

 அந்த பெண்ணும் சிறுவனுடம் தொடர்ந்து பேசி உள்ளார். இப்படியே நாட்களும் காலமும் கடந்தது. ஒரு கட்டத்தில் அந்த குரலின் சொந்தக்காரரை பார்க்க சிறுவன் விரும்பினார். ஒரு நாள்  நேரில் பார்க்கலாம் என்று இருவரும் முடிவு செய்தனர். அதற்காக பல்வேறு இடங்களை தேர்வு செய்தனர். முடிவில் பிரம்மபுத்திரா நதிக்கரை அருகே உள்ள சுக்குவாஜார் என்ற கிராமத்தில் சந்திப்பது என முடிவு செய்தனர்.

அந்த இனிமையான குரலுக்கு சொந்தக்காரர் யார் என அவர் மனம் ஏங்கியது. அந்த குரலுக்காக உரிமையானவர் எப்படி எல்லாம் இருப்பார் என்று கற்பனை கனவுகளுடன் காணச்சென்றார். தேன் போன்ற குரலுக்கு சொந்தக்காரர் அங்கு வந்து நின்றார். ஆனால் காத்திருந்த சிறுவன் மனமுடைந்து ஒரு கட்டத்தில் விரக்திக்கே சென்று விட்டார்.

காரணம் வந்தது நின்றதோ 60 வயது மூதாட்டி. ஆனால் இதைவிட அதிர்ச்சி இருவருக்கும் மூதாட்டியின் குடும்பத்தினர் கல்யாணம் செய்து வைக்க முயற்சி நடந்தாக கூற்ப்படுகிறது. இது பற்றி கணவனை இழந்த பாட்டியிடம் கேட்ட போது. 15 வயது சிறுவனின் பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அவரை என் உயிர் நண்பராகவே நினைக்கிறேன். திருமணம் செய்ய நினைக்கவில்லை என்றார்.

என்றாலும், குழந்தைகள் உரிமைகளுக்கான மாநிலப் பாதுகாப்பு ஆணையம் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது. ஒருவேளை இது சம்பந்தமாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது. 

கோல்பாரா மாவட்ட துணை ஆணையர் வர்நாலி தேகா கூறும்போது, ''சிறுவனைக் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்ய முயற்சித்ததாக அதிகாரபூர்வப் புகார் எதுவும் வரவில்லை. இதுகுறித்து விசாரித்து வருகிறோம்'' என்றார்.