தேசிய செய்திகள்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசாக்கள் உயர்வு + "||" + Rupee gains 8 paise to 73.24 against US dollar in early trade

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசாக்கள் உயர்வு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசாக்கள் உயர்வு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசாக்கள் உயர்ந்து ரூ.73.24 ஆக உள்ளது.
மும்பை,

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது 8 பைசாக்கள் உயர்ந்து ரூ.73.24 ஆக உள்ளது.

ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகளால் அமெரிக்க கரன்சியான டாலர் விற்பனை தொடர்ந்து அதிகரித்தது.  இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வடைந்து உள்ளது.

தொடக்கத்தில் ரூ.73.36 என்ற அளவில் இருந்த மதிப்பு பின்னர் ரூ.73.38 ஆக சரிவை நோக்கி சென்றது.  அதன்பின் சரிவிலிருந்து மீண்டு ரூ.73.24 ஆக இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.

சர்வதேச அளவில் சில நாட்டு கரன்சிகளுக்கு எதிராக அமெரிக்க டாலர் மதிப்பு சரிவடைந்திருந்தது.  இதனை தவிர்த்து, பங்கு சந்தைகளில் வர்த்தக தொடக்கத்தில் லாபம் காணப்பட்டது.  இந்த காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வடைந்து உள்ளது என வெளிநாட்டு பணபரிவர்த்தனை வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.