"ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் முன்நிறுத்தவில்லை" - ப.சிதம்பரம்


ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் முன்நிறுத்தவில்லை - ப.சிதம்பரம்
x
தினத்தந்தி 23 Oct 2018 8:29 AM GMT (Updated: 23 Oct 2018 8:29 AM GMT)

கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக முன்நிறுத்தவில்லை என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக முன்நிறுத்தவில்லை என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. வை ஆட்சியில் இருந்து அகற்றுவது தான் முதல் இலக்கு என்றும், பிரதமர் பதவி ஒரு விசயமே இல்லை என்றும் அவர் கூறினார். பிரதமர் வேட்பாளர் குறித்து பேச காங்கிரஸ்  கட்சியினருக்கு கட்டுப்பாடு, தடை ஏதும் விதிக்கவில்லை என்றும் சிதம்பரம் கூறினார். தேர்தலுக்கு பின்னர் பிரதமர் வேட்பாளர் குறித்து கூட்டணி கட்சித் தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் தெரிவித்தார். 

Next Story