அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் சிலை நிறுவும் திட்டம் உள்ளது: உ.பி பாஜக நிர்வாகி தகவல்


அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் சிலை நிறுவும் திட்டம் உள்ளது: உ.பி பாஜக நிர்வாகி தகவல்
x
தினத்தந்தி 3 Nov 2018 6:44 AM GMT (Updated: 3 Nov 2018 6:44 AM GMT)

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சராயு நதிக்கரையில் பிரம்மாண்ட ராமர் சிலை நிறுவும் திட்டம் உள்ளதாக பாஜக நிர்வாகி தெரிவித்துள்ளார்.

லக்னோ,

அயோத்தியில் உள்ள சராயு நதிக்கரையில் கடவுள் ராமருக்கு 151 அடி உயரத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்கும் திட்டம் இருப்பதாக உத்தர பிரதேச பாஜக நிர்வாகி ரிஷிகேஷ் உபாத்யாய் தெரிவித்துள்ளார். 

அயோத்தி நகராட்சி மேயராக பதவி வகித்து வரும் உபாத்யாய் மேலும் கூறுகையில், “ தீபாவளி தினத்தன்று ராமர் சிலை நிறுவுவதற்கான திட்டத்தை உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவிப்பார் எனவும், மண்ணின் தன்மையை ஆய்வு செய்தபின் சிலை எங்கு நிறுவப்படும் என்பதற்கான உரிய அறிவிப்பு வெளியாகும் எனவும் மூன்று இடங்கள் தற்போது பரிசீலனையில் இருப்பதாகவும்” தெரிவித்தார் .

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்படுபவருமான சர்தார் வல்லபாய் படேலுக்கு 182 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்டமாக சிலை நிறுவப்பட்டுள்ளது. உலகிலேயே மிக உயரமான இந்த சிலையை பிரதமர் மோடி கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி திறந்து வைத்தார். இந்த நிலையில், கடவுள்  ராமருக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கும் திட்டத்தை உத்தர பிரதேச அரசு அறிவிக்க உள்ளது. 


Next Story