கேதார்நாத்தில் தீபாவளி கொண்டாடும் பிரதமர் மோடி


கேதார்நாத்தில் தீபாவளி  கொண்டாடும் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 5 Nov 2018 7:53 AM GMT (Updated: 5 Nov 2018 7:53 AM GMT)

பிரதமர் மோடி தீபாவளியை முன்னிட்டு கேதார்நாத் கோவிலில் வழிபாடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுடெல்லி

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில்  தீபாவளி கொண்டாடினார். பிரதமர் கடந்த ஆண்டு பாண்டிப்போரா மாவட்டத்தில் காஷ்மீரின் குரேஸ் துறைக்கு சென்று அங்கு படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். 

2016 ஆம் ஆண்டு  பிரதமர் மோடி ஹிமாச்சல பிரதேசத்தில்   தீபாவளியை கொண்டாடினார். 2015 ல், பிரதமர் மோடி அமிர்தசரில்  ராணுவ வீரர்களுடன்  சேர்ந்து தீபாவளி கொண்டாடினார்

இந்த ஆண்டு கேதார்நாத்  செல்லும் பிரதமர் அங்கு தீபாவளியை கொண்டாடுகிறார்.  கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி 2 மணி நேரம் வழிபாடு செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

கடந்த் 2013 ஜூன் மாதம் ஏற்பட்ட புயலால் பாதிக்கபட்ட கேதார்நாத்தில் பல்வேறு மறு கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன 
கேதார்புரி மறுகட்டமைப்புப் பணிகளை  பிரதமர் ஆய்வு செய்யவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கேதார்புரி திட்டத்துக்கு பிரதமர் மோடி கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது கேதார்நாத் பயணத்தின் போது அந்த பணிகளை ஆய்வு செய்யவுள்ளதாகவும், பணிகளின் முன்னேற்றம் தொடர்பான கண்காட்சி மற்றும் குறும்படத்தை பார்வையிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பிரதமர் மோடி பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்ற இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Next Story