தேசிய செய்திகள்

கோர்ட்டு உத்தரவை மீறி டெல்லியில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் 5 மில்லியன் கிலோ பட்டாசுகள் வெடிப்பு + "||" + Delhi Burnt 5 Million Kg Firecrackers on Diwali, the Same as Last Year Despite SC Order

கோர்ட்டு உத்தரவை மீறி டெல்லியில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் 5 மில்லியன் கிலோ பட்டாசுகள் வெடிப்பு

கோர்ட்டு உத்தரவை மீறி டெல்லியில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் 5 மில்லியன் கிலோ பட்டாசுகள் வெடிப்பு
டெல்லியில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் 5 மில்லியன் கிலோ பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. மேலும் குறிப்பிட்ட டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க தடையும் விதிக்கப்பட்டது. தலைநகர் டெல்லி ஏற்கனவே காற்று மாசு காரணமாக பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு பெருமளவு பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மொத்தமாக பதுக்கப்பட்ட பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இருப்பினும் பட்டாசு வெடிப்பில் எந்தஒரு மாற்றமும் இல்லாமல் இந்த ஆண்டும் தீபாவளி கொண்டாடப்பட்டுள்ளது. 

 டெல்லியில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் 5 மில்லியன் கிலோ பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காற்றின் மாசு ஏற்கனவே இருந்த அளவைவிடவும் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
2. இரட்டை குடியுரிமை பிரச்சினை: ராகுல் காந்தியின் 2 வேட்புமனுக்களை நிராகரிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வருகிறது
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை வைத்திருக்கிறார் என அமேதி சுயேட்சை வேட்பாளரான துருவ் லால் என்பவரின் புகாரை நிராகரித்த தேர்தல் கமி‌ஷன் ராகுல் காந்தியின் வேட்பு மனுக்களை அமேதி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் ஏற்றுக் கொண்டது.
3. மோடி, அமித்ஷா மீதான தேர்தல் விதி மீறல் புகார்கள் : காங்கிரஸ் மனுக்கள் மீது 6–ந் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் - தேர்தல் கமி‌ஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பிரதமர் மோடி, அமித்ஷா மீது காங்கிரஸ் அளித்துள்ள தேர்தல் விதி மீறல் புகார்கள் குறித்து வருகிற 6–ந் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
4. பிரதமர் மோடி மீதான வழக்கு: தேர்தல் கமி‌ஷனுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்துவருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவிடக்கோரியும் காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
5. இங்கிலாந்து வசம் உள்ள கோஹினூர் வைரத்தை மீட்க கோரிய மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தென்னிந்தியாவில் 14–ம் நூற்றாண்டில் கோஹினூர் வைரம் கண்டெடுக்கப்பட்டது. இது, 108 காரட் கொண்டது. இந்தியாவில் காலனி ஆட்சி நடந்தபோது, இந்த வைரம் ஆங்கிலேயர்கள் கைக்கு சென்றது.