சத்தீஷ்கர் தேர்தல்: ஜனநாயக கடமை ஆற்ற வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்


சத்தீஷ்கர் தேர்தல்: ஜனநாயக கடமை ஆற்ற வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Nov 2018 4:15 AM GMT (Updated: 12 Nov 2018 4:15 AM GMT)

சத்தீஷ்கர் தேர்தலை முன்னிட்டு ஜனநாயக கடமை ஆற்ற வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

90 உறுப்பினர்களை கொண்ட சத்தீஷ்கார் மாநில சட்டசபையின் ஆயுட்காலம் முடிவதைதொடர்ந்து அங்கு நவம்பர் 12 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று(திங்கட்கிழமை) முதல் கட்டமாக 18 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

மோஹ்லா-மான்பூர், அண்டாகர், பானுபிரதாப்பூர், தண்டேவாடா, பிஜாப்பூர் உள்பட 10 தொகுதிகளில் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும், ராஜ்நந்த்கான் உள்ளிட்ட 8 தொகுதிகளில் காலை 8 மணி முதல் 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

சத்தீஷ்கர் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “ ஜனநாயகத்தின் திருவிழாவில் பெருவாரியான எண்ணிக்கையில் வாக்காளர்கள் கலந்து கொண்டு தங்கள் வாக்கினை பதிவு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். தேர்தல் நடைபெறும் சமயத்தில், டுவிட்டர் வாயிலாக வாக்களிப்பதை வலியுறுத்தி பிரதமர் மோடி கோரிக்கை விடுப்பதை வழக்கமாக  கொண்டுள்ளார். 

Next Story