குழந்தைகள் தினம்: பள்ளி மாணவி வரைந்த ஓவியத்தை டூடுள் பக்கமாக மாற்றிய கூகுள்


குழந்தைகள் தினம்: பள்ளி மாணவி வரைந்த ஓவியத்தை டூடுள் பக்கமாக மாற்றிய கூகுள்
x
தினத்தந்தி 14 Nov 2018 10:14 AM GMT (Updated: 14 Nov 2018 10:14 AM GMT)

குழந்தைகள் தினத்தையொட்டி மும்பை பள்ளி மாணவி வரைந்த ஓவியத்தை கொண்டு கூகுள் தனது டூடுள் பக்கத்தை உருவாக்கி உள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு இன்று பிறந்த தினமாகும். ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம் குழந்தைகள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களின் சிந்தனை மற்றும் படைப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் சமீபத்தில் ’டூடுள்ஃபார் கூகுள்’  என்ற போட்டியை நடத்தியது. 

இந்த போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 75,000-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பங்கேற்றனர். இந்த போட்டிக்கான தலைப்பு என்னை ஊக்குவிப்பது எது? என்ற தலைப்பு கொடுக்கப்பட்டது. 

அதில் மும்பையை சேர்ந்த பிங்ளா என்ற மாணவி தீட்டிய ஓவியம் டூடுளாக தேர்வு செய்யப்பட்டது. இந்த போட்டியில் வெற்றியடைந்த மும்பை மாணவி வரைந்த டூடுள்தான் இன்றைய தினத்தில் கூகுள் டூடுளாக வைக்கப்பட்டுள்ளது. 

இந்த டூடுளில்‘ஒரு மாணவி விண்வெளியை டெலஸ்கோப்பில் பார்ப்பதாகவும், அந்த விண்வெளி பரந்து காணப்படுவதாக அந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. 

இந்த டூடுளை மும்பையை சேர்ந்த பிங்ளா ராகுல் மோர் என்ற மாணவி வரைந்துள்ளார்.

Next Story