இந்திய தேர்தல் ஆணையம் பெயரில் போலியாக இயங்கிய 2 டுவிட்டர் கணக்குகள் நீக்கம்


இந்திய தேர்தல் ஆணையம் பெயரில் போலியாக இயங்கிய 2 டுவிட்டர் கணக்குகள் நீக்கம்
x
தினத்தந்தி 14 Nov 2018 1:21 PM GMT (Updated: 14 Nov 2018 1:21 PM GMT)

தேர்தல் ஆணையம் பெயரில் இயங்கிய 2 போலி கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

புதுடெல்லி,

இந்திய தேர்தல் ஆணையம் பெயரில் போலியாக 2 டுவிட்டர் கணக்குகள் இயங்கி வந்தன.  @Election Comm மற்றும் @DalitFederation என்று தனித்தனியான பெயரில் இயங்கி வந்த இந்த கணக்குகளை ஆயிரக்கணக்கானோர் பின்பற்றி வந்துள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு என்று அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு எதுவும் இல்லை.  இந்த நிலையில், போலியான கணக்குகள் மக்களை தவறாக வழிநடத்த கூடும் என தேர்தல் ஆணையம் அச்சமடைந்தது.  இதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்திடம் தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டது.

அதன்படி இந்திய தேர்தல் ஆணையம் பெயரில் போலியாக செயல்பட்டு வந்த 2 கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

Next Story