பண மதிப்பிழப்பு நடவடிக்கை சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் ராகுல் காந்தி குற்றச்சாட்டு


பண மதிப்பிழப்பு நடவடிக்கை சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 16 Nov 2018 11:07 AM GMT (Updated: 16 Nov 2018 11:07 AM GMT)

பண மதிப்பிழப்பு நடவடிக்கை சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

சாகர்,

மத்திய பிரதேச மாநிலம் சகாரில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார். ராகுல் காந்தி பேசுகையில், “பண மதிப்பிழப்பு நடவடிக்கை சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழலாகும். ஏழை மக்கள் கடினமாக உழைத்த பணத்தை பிரதமர் மோடி பறித்து பணக்காரர்களிடம் கொடுத்துள்ளார் என்பதை நிரூபிப்போம். பிரான்ஸ் நிறுவனம் மற்றும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸிடம் இருந்து 126 ரபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார். இந்திய  விமானப்படை மற்றும் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம் தெரிவிக்காமல் சுயமாக ரத்து செய்துள்ளார்.

ஒப்பந்தத்தை அம்பானி நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும் என்று இந்திய அரசு கேட்டுக்கொண்டது என்று பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹலாண்டே  கூறியுள்ளார். மோடி இந்த ஒப்பந்தம் மூலம் அம்பானிக்கு ரூ. 30 ஆயிரம் கோடியை கொடுத்துள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து கடிமாக உழைத்த மக்களை வங்கிக்கு வெளியே நிற்கவைத்தார் பிரதமர் மோடி. ஆனால் நிரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி, விஜய் மல்லையாவை உங்களுடைய பணத்துடன் தப்பிக்க வைத்துவிட்டார். பிரதமர் மோடி உங்களை எப்படி கொள்ளையடித்தார், வசதிபடைத்தவர்களிடம் கொடுத்தார் என்பதை காலம் நிரூபிக்கும்.

பிரதமர் மோடியின் இப்போதைய பிரசார பேச்சுக்களில் ஊழலை ஒளிப்போம் என்ற வாசகம் இடம்பெறவில்லை. பிரதமர் மோடி தேசத்தின் வாட்ச்மேனாக இருப்பேன் என்றார், ஆனால் தொழில் அதிபர்களின் பாதுகாவலராகியுள்ளார் என்றார். 

Next Story