டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற நிலையை எட்டியது !


டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற நிலையை எட்டியது !
x
தினத்தந்தி 17 Nov 2018 5:17 AM GMT (Updated: 17 Nov 2018 5:17 AM GMT)

டெல்லியில் காற்று மாசு மீண்டும் அபாய நிலையை எட்டியுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் ஓரளவு மேம்பட்டு இருந்த நிலையில், தற்போது மீண்டும் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியது. 

இதனால், காலை வேளையில் டெல்லியில் எங்கு பார்த்தாலும் புகை படலமாக காட்சியளித்தது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அதிகாலையில் நடைபயிற்சி செல்பவர்களும் திண்டாடிப்போகினர். காற்றின் மாசுவை அளவிடும் பிஎம்.2.5- என்ற குறியீட்டில் 339 என்ற அளவுக்கு காற்று மாசு இருந்தது. 

காற்று தரக்குறியீட்டை பொறுத்தவரை 0- 50 என்பது நல்ல நிலை என்றும் 50-100 என்பது திருப்திகரமான அளவாகும், 100-200 மிதமான அளவு எனவும், 201- 300 என்பது மோசமான அளவு எனவும், 301- முதல் 400 என்பது மிகவும் மோசம் எனவும், 401-500 என்பது மிகவும் அபாயகரமான அளவு என குறிப்பிடப்படுகிறது. காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், நாளை காற்றின் தரம் இன்னும் மோசமாக கூடும் என்று கூறப்படுகிறது. 

Next Story