தேசிய செய்திகள்

பெங்களூர்: பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் காலமானார் + "||" + Bangalore: The famous Kannada actor ambareesh passed away

பெங்களூர்: பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் காலமானார்

பெங்களூர்: பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் காலமானார்
பெங்களூரில், உடல்நலக்குறைவால் பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் காலமானார். #ActorAmbareesh
பெங்களூர்,

அம்பரீஷ் பிரபல கன்னட நடிகர் ஆவார். அவர் கன்னட படங்களில் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பர் ஆவார்.

அவர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்திலான அமைச்சராக பதவி வகித்தவர்.  


அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

அம்பரீஷின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்ததால், மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.  

அம்பரீஷின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில், இன்று இரவு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது உயிர்பிரிந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. ஏசி அறையில் இருந்து கொண்டு ராமர் கோவில் அரசியல் விளையாடப்படுகிறது -நடிகர் பிரகாஷ்ராஜ்
டெல்லி மற்றும் லக்னோவில் ஏசி அறையில் இருந்து கொண்டு ராமர் கோவில் அரசியல் விளையாடப்படுகிறது என நடிகர் பிரகாஷ்ராஜ் குற்றம்சாட்டினார்.