தேசிய செய்திகள்

இந்தியாவில் 5 ஜி சேவை 2022-ல் தான் கிடைக்கும் - டிராய் செயலாளர் எஸ்.கே. குப்தா + "||" + 5G expected in India by 2022: Trai Secretary

இந்தியாவில் 5 ஜி சேவை 2022-ல் தான் கிடைக்கும் - டிராய் செயலாளர் எஸ்.கே. குப்தா

இந்தியாவில் 5 ஜி சேவை 2022-ல் தான் கிடைக்கும் - டிராய் செயலாளர் எஸ்.கே. குப்தா
இந்தியாவில் 5 ஜி சேவை வரும் 2022-ல் தான் கிடைக்கும் என்று டிராய் செயலாளர் எஸ்.கே. குப்தா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

டெல்லியில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின்  செயலாளர் குப்தா பேசுகையில்,

நாட்டில் இப்போது 40 கோடி பேருக்கு இணையதள சேவை தரமான முறையில் வழங்கப்படுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் டிஜிட்டல் முறையில் இணையதள சேவை மேம்படும். நாளுக்கு நாள் செல்போன் சேவை வளர்ந்து வருகிறது. இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகளும் மேம்படுத்தப்படுகின்றன. 

வரும் 2022-ல் நாட்டில் 5ஜி சேவை நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் டேட்டா மற்றும் இணையதள வசதிகள் மேம்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.