சபரிமலை விவகாரம்: பாரதீய ஜனதா தலைவர் உண்ணாவிரதம் இருந்துவரும் இடத்தில் அய்யப்ப பக்தர் தீக்குளிப்பு


சபரிமலை விவகாரம்: பாரதீய ஜனதா தலைவர் உண்ணாவிரதம் இருந்துவரும் இடத்தில் அய்யப்ப பக்தர் தீக்குளிப்பு
x
தினத்தந்தி 13 Dec 2018 8:00 AM GMT (Updated: 13 Dec 2018 9:31 AM GMT)

சபரிமலை விவகாரத்தில் பாரதீய ஜனதா தலைவர் உண்ணாவிரதம் இருந்துவரும் இடத்தில் அய்யப்ப பக்தர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்து உள்ளார்.

திருவனந்தபுரம், 

சபரிமலை விவகாரத்தில், கேரள மாநில அரசின் அணுகுமுறையை கண்டித்து, பா.ஜனதா சார்பில் கடந்த டிசம்பர் 4-ந்தேதி காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டது. போராட்டத்தை பாரதீய ஜனதா தலைவர் சி.கே.பத்மநாபன் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.  திருவனந்தபுரத்தில், தலைமை செயலகம் எதிரில்  இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று அதிகாலை 1.30 மணி அளைவில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற  பகுதில் 49 வயது அய்யப்ப பக்தர் ஒருவர் சுவாமியே சரணம் அய்யப்பா என்ற கோஷத்துடன் தனக்கு தானே தீவைத்து கொண்டார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.  தீக்குளித்தவர் பெயர் வேணுகோபாலன் நாயர் என்பதும், முத்தடா பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் மீது 60 சதவீத தீக்காயம் ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து சி.கே.பத்மநாபன் கூறியதாவது:-

வேணுகோபாலன் நாயர் ஒரு அய்யப்ப பக்தர். வேணுகோபாலன் நாயருக்கு போதை பழக்கம்  உள்ளதாகவும், சில குடும்ப பிரச்சினைகள் உள்ளதாகவும் 
இது குறித்து போலீசார் அனைத்து கோணங்களிலிருந்தும் விசாரணை நடத்தி வருகின்றனர் என கூறினார்

Next Story