ரபேல் தீர்ப்பு: ராமர் கோவில் கட்டுவதை முடிவு செய்வது சுப்ரீம் கோர்ட்டு பணி கிடையாது -சிவசேனா


ரபேல் தீர்ப்பு: ராமர் கோவில் கட்டுவதை முடிவு செய்வது சுப்ரீம் கோர்ட்டு பணி கிடையாது -சிவசேனா
x
தினத்தந்தி 14 Dec 2018 9:27 AM GMT (Updated: 14 Dec 2018 10:03 AM GMT)

மத்திய அரசு ரபேல் விமானங்களை கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் எந்தவிதமான சந்தேகமும் இருப்பதாக கருதவில்லை என்று விசாரணை கோரிய மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்துள்ள சுப்ரீம் கோர்ட்டு, விமானக் கொள்முதல் விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த எந்த காரணமும் இல்லை. போர் விமானங்களின் விலையை ஒப்பிட்டு பார்த்து விசாரிப்பது நீதிமன்றத்தின் பணி கிடையாது. ரபேல் விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கும், நீதிமன்றம் தலையிடுவதற்கும் எந்தவிதமான முறைகேடும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என்றுகூறி மனுக்களை தள்ளுபடி செய்தது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை பா.ஜனதா கொண்டாடி வருகிறது.

இதுதொடர்பாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பேசுகையில், “சுப்ரீம் கோர்ட்டு எதையும் தவறாக சொல்லவில்லை, விலையை தீர்மானம் செய்வது சுப்ரீம் கோர்ட்டு பணி கிடையாது என்றால், அதேபோன்று ராமர் கோவிலை கட்டவேண்டியது தொடர்பாக முடிவு எடுப்பதும் சுப்ரீம் கோர்ட்டின் பணி கிடையாது. ரபேல் விவகாரம் பாராளுமன்றத்தில் தீர்க்கப்பட வேண்டியது, சுப்ரீம் கோர்ட்டில் கிடையாது,” என கூறியுள்ளார்.

Next Story