தேசிய செய்திகள்

தமிழக மக்களின் மகிழ்ச்சியையும், வலிமையையும் தன்னுடையதாக கருதியவர் கருணாநிதி - ராகுல் காந்தி + "||" + we arent going to allow the destruction of the idea of India Rahul Gandhi

தமிழக மக்களின் மகிழ்ச்சியையும், வலிமையையும் தன்னுடையதாக கருதியவர் கருணாநிதி - ராகுல் காந்தி

தமிழக மக்களின் மகிழ்ச்சியையும், வலிமையையும் தன்னுடையதாக கருதியவர் கருணாநிதி - ராகுல் காந்தி
தமிழக மக்களின் மகிழ்ச்சியையும், வலிமையையும் தன்னுடையதாக கருதியவர் கருணாநிதி என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ஒவ்வொரு அரசியல் தலைவர்களுக்கும் இரண்டு பக்கம் உள்ளது. மக்களின் குரலை மற்றும் தன் குரலை மக்களுக்காக பிரதிபலிப்பது.  தலைவர் கருணாநிதி  தமிழக மக்களின் குரலாகவே வாழ்ந்தவர். மக்களுக்காக வாழ்ந்தார். தமிழக மக்களின் மகிழ்ச்சியையும், வலிமையையும் தன்னுடையதாக கருதியவர். கலைஞர் முழுவாழ்க்கையையும் தமிழக மக்களுக்காக அர்ப்பணித்தவர். 

நீங்கள் கலைஞரை நினைவில் கொண்டிருப்பீர்கள்,  பார்த்திருப்பீர்கள். அவருடைய நினைவுகளை கொண்டிருப்பீர்கள். நான் கலைஞர் அவர்களை இரண்டாவது முறையாக சந்தித்ததை நினைவுகூறுகிறேன்.  அதற்கு முன்னதாக அவருடைய வீட்டிற்கு சென்றது கிடையாது. அவருடைய வீடு மிகவும் பெரியதாக இருக்கும் என்று நினைத்தேன். அங்கு அதிகமான பொருட்கள் இருக்கும் என்று நினைத்தேன். பல ஆண்டுகள் அரசியலில் இருக்கும் தலைவரின் வீடு மிகப்பெரியதாக இருக்கும் என்று சந்திரபாபு நாயுடுவை போன்று நானும் நினைத்தேன். ஆனால் அவருடைய வீட்டிற்கு நான் சென்றபோது மிகவும் ஆச்சர்யம் அடைந்தேன். அவருடைய எளிமை, நேர்மையை பார்த்து ஆச்சர்யம் அடைந்தேன்.  பல ஆண்டு முதல்வராக இருந்த அவரின் எளிமை மற்றும் அகங்காரம் இல்லாத தன்மையை பார்த்து மிகவும் பெருமையடைந்தேன்.  

ஒரு இளம் தலைவராக அவரை சந்தித்த போது எனக்கு உந்துந்தலாகவும், வழிகாட்டுதலாகவும் இருந்தது.  தலைமைக்கான வழியை காட்டியதையும் பார்க்கிறேன். கலைஞர் மக்களின் குரலை பாதுகாப்பவர்.  அரசியல் சட்டங்களை பாதுகாப்பவர்.  இப்போது உள்ள அரசோ தமிழர்களின் கலாசாரங்களை அழித்து வருவதை பார்கிறேன்.  இப்போது ஆட்சியில் உள்ள அரசு  கோடான கோடி மக்களின் மனநிலையை மதிக்க வேண்டியது இல்லை என்று நினைக்கிறது.  இந்நாட்டில் உள்ள மொழிகள், கலாச்சாரம், பண்பாட்டை மதிக்கவேண்டியதில்லை என்று நினைக்கிறது. கலைஞர் நினைவில் கொண்டு மக்களை ஒற்றுமையை படுத்தி பா.ஜனதாவை அடக்குவோம் என்ற மனநிலை எல்லோரிடமும் உள்ளது. 

இந்தியாவின் ஒருமைப்பாட்டை அழிப்பதை ஏற்கப்போவது கிடையாது.  ரிசர்வ் வங்கி, சுப்ரீம் கோர்ட்டு, தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்களை அழிப்பதை ஏற்கப்போது கிடையாது. நாம் ஒன்றுப்படபோகிறோம், நாட்டிற்காக  பா.ஜனதாவை ஆட்சிலிருந்து நீக்கும் பணியை செய்வோம்.இங்கு வந்தது பெருமைக்குரிய விஷயம், கவுரமாக நினைக்கிறேன்.  ஒவ்வொரு தமிழர்களின் பெருமையை கண்டு பெருமையடைகிறேன். நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை பலப்படுத்த வேண்டும் என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. மகா கூட்டணி ஆதரவிலும் பா.ஜனதாவிற்கு எதிராக ராகுலுக்கு தோல்வி முகம்...!
அமேதி தொகுதியில் மகா கூட்டணியின் ஆதரவிலும் பா.ஜனதாவிற்கு எதிராக ராகுல் காந்தி தோல்வி முகம் காணப்படுகிறது.
2. பிரதமருக்கு எதிராக அவதூறு: ராகுல் காந்தி மீதான வழக்கில் தீர்ப்பு நிறுத்திவைப்பு - டெல்லி கோர்ட்டு உத்தரவு
பிரதமருக்கு எதிராக அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது பதிவான வழக்கில், தீர்ப்பை நிறுத்திவைத்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.
3. அமேதியில் ராகுலுக்கு கடுமையான சவால்; வயநாட்டிலிருந்து எம்.பி. ஆவாரா?
உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு கடுமையான சவால் இருப்பதாக கருத்துக்கணிப்பு தகவல் தெரிவிக்கிறது.
4. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங். தலைவர் ராகுல் காந்தியை இன்று மயாவதி சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தார்.
5. ஜெயலலிதா மரணம் குறித்து இப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசாதது ஏன்? திருப்பரங்குன்றம் பிரசாரத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி
“ஜெயலலிதா மரணம் குறித்து இப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசாதது ஏன்?” என்று திருப்பரங்குன்றம் தொகுதி பிரசாரத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.