பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சந்திப்பு


பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சந்திப்பு
x
தினத்தந்தி 17 Dec 2018 8:24 AM GMT (Updated: 17 Dec 2018 8:24 AM GMT)

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சந்தித்தனர்.

பெங்களூரு,

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளரும், சென்னை ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தினகரன் சந்தித்து பேசினார். தினகரனுடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பழனியப்பன், முருகன், கதிர்காமு, பார்த்திபன், சுப்பிரமணியன், தங்கதுரை, உமாமகேஸ்வரி, மாரியப்பன் கென்னடி, கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி ஆகியோரும் சந்தித்து பேசினர்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி தி.மு.க.வில் சேர்ந்தபிறகு நடைபெறும் சந்திப்பு இதுவாகும். மேலும் சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 2 நாள் விசாரணை நடத்திய பிறகு இந்த சந்திப்பு நடைபெறுவதால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Next Story