3 மாநில தோல்விகளால் பா.ஜனதா மெத்தனப்போக்கில் இருந்து விழித்துக் கொண்டது சுப்பிரமணிய சாமி கருத்து


3 மாநில தோல்விகளால் பா.ஜனதா மெத்தனப்போக்கில் இருந்து விழித்துக் கொண்டது சுப்பிரமணிய சாமி கருத்து
x
தினத்தந்தி 25 Dec 2018 11:15 PM GMT (Updated: 2018-12-26T03:59:36+05:30)

சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 3 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதா தோல்வி அடைந்தது.

புதுடெல்லி,

சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 3 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதா தோல்வி அடைந்தது குறித்து அக்கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சாமி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:–

இந்த போரில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதன் விளைவால் பா.ஜனதா தோல்வி அடைந்துள்ளது. சமீபத்திய 3 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதாவுக்கு ஏற்பட்ட தோல்விகளால் கட்சி மெத்தனப்போக்கில் இருந்து விழித்துக்கொண்டது. எங்கள் முகங்களில் தெரியும் தோல்வியின் சுவடுகளோடு, 2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற புதிய உறுதி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story