”கேமிராவிற்கு போஸ் கொடுப்பதை நிறுத்துங்கள்” சுரங்கத்தில் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை காப்பாற்றுங்கள் -பிரதமருக்கு ராகுல் கோரிக்கை


”கேமிராவிற்கு போஸ் கொடுப்பதை நிறுத்துங்கள்” சுரங்கத்தில் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை காப்பாற்றுங்கள் -பிரதமருக்கு ராகுல் கோரிக்கை
x
தினத்தந்தி 26 Dec 2018 9:38 AM GMT (Updated: 2018-12-26T15:08:37+05:30)

2 வாரங்களாக சுரங்கத்தில் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை காப்பாற்றுங்கள் என பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கோரிக்கை வைத்து உள்ளார்.

புதுடெல்லி

மேகாலயாவில் கிழக்கு ஜெயின்டியா மலைகள் மாவட்டத்தில் லட்டினி ஆற்றில் திடீரென வெள்ளம் ஏற்பட்டதால், கடந்த டிசம்பர் 13-ந்தேதி முதல் சுரங்கத்திற்குள் 15 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். 15 சுரங்கத் தொழிலாளர்களையும் மீட்கும் நடவடிக்கை உபகரணங்கள் இல்லாததால் நிறுத்தப்பட்டு உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சுரங்கத்திற்குள் சிக்கியிருப்பவர்களை மீட்க போதுமான அளவு பணியாளர்கள்  மற்றும் உபகரணங்கள் இல்லை என்று மேகாலயாவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடி கேமிராவிற்கு  போஸ் கொடுப்பதை விட்டு விட்டு சுரங்கத்திற்குள் சிக்கி உள்ள தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளார்.

இரண்டு வாரங்களாக வெள்ளம் புகுந்த நிலக்கரி சுரங்கத்தில் 15 சுரங்கத் தொழிலாளர்கள் உயிருக்கு போராடி வருகின்றனர். இதற்கிடையில், பிரதமர் போகிபீல் பாலம் மீது கேமிராக்களுக்கு  போஸ் கொடுத்து வருகிறார். தொழிலாளர்களை மீட்க மத்திய  அரசு உயர் அழுத்த நடவடிக்கைகளை  ஏற்பாடு செய்ய மறுத்துவிட்டது. பிரதமர் தயவு  செய்து சுரங்கத் தொழிலாளர்களை காப்பாற்றுங்கள் என  ராகுல்காந்தி தனது டுவிட்டரில் கூறி உள்ளார்.


Next Story