தேசிய செய்திகள்

விமான நிலையங்களில் உள்ளூர் மொழியில் பொது அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு உத்தரவு + "||" + Govt asks airports to make public announcements in local language too

விமான நிலையங்களில் உள்ளூர் மொழியில் பொது அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு உத்தரவு

விமான நிலையங்களில் உள்ளூர் மொழியில் பொது அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு உத்தரவு
விமான நிலையங்களில் உள்ளூர் மொழியில் பொது அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களியிலும் இந்தி, ஆங்கிலத்தை அடுத்து உள்ளூர் மொழியிலும் பொது அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று அனைத்து விமான நிலையங்களுக்கு அரசு உத்தரவை அனுப்பியுள்ளது.

மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவின்படி இந்நகர்வு ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் மொழியிலும் பொது அறிவிப்பை வெளியிடுவது தொடர்பாக தனியார் விமான நிறுவனங்களுக்கும் தகவலை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. அனைத்து விமான நிலையங்களிலும் உள்ளூர் மொழியிலும் அறிவிப்பை வெளியிட தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார். பொது அறிவிப்பு வெளியாகாத விமான நிலையங்களுக்கும் இது பொருந்தும்.  2016-ல் இந்திய விமான நிலைய ஆணையம் அனைத்து விமான நிலையங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், இந்தி, ஆங்கிலத்தை அடுத்து உள்ளூர் மொழியிலும் அறிவிப்பை வெளியிட கேட்டுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 100-க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளது. அங்கு உள்ளூர் மொழியிலும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்ததை அடுத்து மத்திய அமைச்சகம் இம்முடிவை எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ராகுல் காந்தி ஸ்ரீநகர் விமான நிலையம் வருகை
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி ஸ்ரீநகர் விமான நிலையம் வந்து சேர்ந்தார்.
2. ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கம்
போராட்டம் தணிந்ததால், ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன.
3. விமான நிலையத்தில் திரண்ட ஹாங்காங் போராட்டக்காரர்கள் - 3 நாட்கள் தங்கியிருந்து போராட முடிவு
சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்காக ஹாங்காங் போராட்டக்காரர்கள் விமான நிலையத்தில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் அங்கு 3 நாட்கள் தங்கியிருந்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
4. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, கோவை விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட் டதை தொடர்ந்து கோவை விமான நிலையத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
5. 6 விமான நிலையங்கள் தனியார் மயமாகின்றன - மத்திய அரசு தகவல்
மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய், விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் திட்டம் உள்ளதா? கொல்கத்தா விமான நிலையம் தனியாரிடம் ஒப்படைக்கப்படுமா? போன்ற கேள்விகளை எழுப்பினார்.