கோர்ட்டு வளாகத்தில் நீதிபதிக்கு அடி அரசு வக்கீல் மீது புகார்


கோர்ட்டு வளாகத்தில் நீதிபதிக்கு அடி அரசு வக்கீல் மீது புகார்
x
தினத்தந்தி 26 Dec 2018 11:00 PM GMT (Updated: 2018-12-27T02:15:46+05:30)

மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் மூத்த சிவில் நீதிபதியாக இருப்பவர் கே.ஆர்.தேஷ்பாண்டே.

நாக்பூர்,

நீதிபதி கே.ஆர்.தேஷ்பாண்டே நேற்று கோர்ட்டு கட்டிடத்தின் 7–வது மாடியில் உள்ள ‘லிப்ட்’ அருகே சென்று கொண்டிருந்தபோது, அரசு உதவி வக்கீல் டி.எம்.பராடே என்பவர் வழிமறித்து கன்னத்தில் அறைந்தார்.

இதுதொடர்பாக, பராடே மீது சாதர் போலீஸ் நிலையத்தில் நீதிபதி புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரு வழக்கு தொடர்பாக நீதிபதி எடுத்த முடிவால் அதிருப்தி அடைந்து அவரை வக்கீல் கன்னத்தில் அறைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story