குளித்து விட்டு வெளியே வந்த இளம்பெண்ணை பால்கனியில் இருந்து படம் பிடித்த வாலிபர் கைது


குளித்து விட்டு வெளியே வந்த இளம்பெண்ணை பால்கனியில் இருந்து படம் பிடித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 1 Jan 2019 10:55 AM IST (Updated: 1 Jan 2019 10:55 AM IST)
t-max-icont-min-icon

குளித்து விட்டு குளியலறையில் இருந்து வெளியே வந்த இளம்பெண்ணை பால்கனியில் இருந்து படம் பிடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

டெல்லியில் ஷகார்பூர் பகுதியில் 18 வயது இளம்பெண் ஒருவர் குளித்து விட்டு குளியலறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.  அவரை 42 வயது நபரொருவர் தனது வீட்டு பால்கனியில் இருந்து புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

இதனை கண்ட அந்த இளம்பெண் உடனே கூச்சலிட்டதுடன், தன் கையில் வைத்திருந்த வாளியை தூக்கி அந்நபர் மீது வீசியுள்ளார்.  இதனால் அவர் வீட்டிற்குள் சென்று விட்டார்.

இதன்பின்னர் இளம்பெண் தனது பெற்றோருடன் சென்று அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.  ஆனால் தனக்கு எதுவும் தெரியாது என அவர் கூறி உள்ளார்.  அந்த நபர் பலமுறை தன்னை பின் தொடர்ந்து வந்துள்ளார்.  தன்னிடம் பேச பலமுறை முயற்சித்து உள்ளார் என இளம்பெண் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

இதுபற்றி போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.  அவரை கைது செய்துள்ளோம் என துணை காவல் ஆணையாளர் பங்கஜ் கூறியுள்ளார்.  குற்றச்சாட்டு கூறப்பட்ட நபர் அங்குள்ள முன்னணி இந்தி நாளிதழ் ஒன்றில் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார்.

Next Story