அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புது வருட தொடக்கத்தில் 15 பைசாக்கள் உயர்வு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புது வருட தொடக்கத்தில் 15 பைசாக்கள் உயர்வடைந்து உள்ளது.
மும்பை,
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அந்நிய சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும்பொழுது, ரூ.69.63 ஆக இருந்தது. பின்னர் ரூ.69.62 ஆனது.
நேற்று வர்த்தகம் முடிவடைந்தபொழுது ரூ.69.77 ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு இன்று புது வருட தொடக்கத்தில் 15 பைசாக்கள் உயர்ந்து ரூ.69.62 ஆக உள்ளது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகளால் அமெரிக்க கரன்சியான டாலர் அதிகளவில் விற்கப்பட்டது இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வதற்கு ஆதரவாக அமைந்துள்ளது என அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதேவேளையில் மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது, சென்செக்ஸ் குறியீடு உயர்வடைந்து இருந்த நிலையில் பின்னர் 85.77 புள்ளிகள் சரிவடைந்து 35,982.56 ஆக உள்ளது.
Related Tags :
Next Story