தேசிய செய்திகள்

நிர்மலா சீதாராமன் தொடர்பான ராகுலின் பேச்சு பெண்களை அவமதிப்பு செய்வது - பிரதமர் மோடி சொல்கிறார் + "||" + Rahul Gandhi s Comments On Defence Minister Insults Women Says PM Modi

நிர்மலா சீதாராமன் தொடர்பான ராகுலின் பேச்சு பெண்களை அவமதிப்பு செய்வது - பிரதமர் மோடி சொல்கிறார்

நிர்மலா சீதாராமன் தொடர்பான ராகுலின் பேச்சு பெண்களை அவமதிப்பு செய்வது - பிரதமர் மோடி சொல்கிறார்
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்பான ராகுல் காந்தியின் பேச்சு பெண்களை அவமதிப்பு செய்வதாகும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ரபேல் விவாதம் நடைபெற்ற போது பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை  என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். பாராளுமன்றத்தில் விவாதத்திலிருந்து தப்பித்துக்கொள்ள பெண் ஒருவரை நியமித்துள்ளார் என்று கூறியுள்ளார். நிர்மலா சீதாராமன் காங்கிரசின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிலையில் இக்கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நிர்மலா சீதாராமன் தொடர்பான ராகுலில் பேச்சு பெண்களை அவமதிப்பு செய்வது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். 

பிரதமர் மோடி பேசுகையில் “முதல்முறையாக இந்தியாவின் மகள் பாதுகாப்புத்துறை அமைச்சராகியுள்ளார். இது மிகவும் பெருமையான விஷயம். பாராளுமன்றத்தில் ரபேல் தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டையும் அமைதியாக்கினார், பொய்யை வெளிப்படுத்தினார். அதிர்ச்சியடைந்தவர்கள் பெண் பாதுகாப்பு அமைச்சரை அவமானப்படுத்தி உள்ளனர். அவர்கள் பாதுகாப்புத்துறை அமைச்சரை மட்டுமல்ல, இந்தியாவின் பெண் சக்தியையும் அவமதித்துள்ளனர்” என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. எமெர்ஜென்சியை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி- அமித்ஷா
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1975-ம் ஆண்டு கொண்டு வந்த அவசர நிலையை எதிர்த்துப் போராடிய அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவிப்பதாக மோடியும், அமித்ஷாவும் தெரிவித்துள்ளனர்.
2. யோகாவை வாழ்வின் ஒரு அங்கமாக கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு வலியுறுத்தல்
யோகா, அனைத்துக்கும் மேலானது என்றும், அதை வாழ்வின் ஒரு அங்கமாக கொள்ள வேண்டும் எனவும் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
3. இமாசல பிரதேசத்தில் பேருந்து விபத்து; பிரதமர் மோடி இரங்கல்
இமாசல பிரதேசத்தில் பேருந்து விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
4. ஒரு தேசம், ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆராய்வதற்கு பிரதமர் மோடி குழு அமைப்பு
ஒரு தேசம், ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆராய்வதற்கு பிரதமர் மோடி குழுவை அமைப்பதாக அறிவித்துள்ளார்.
5. பிரதமர் மோடி வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டால் கலந்து கொள்வேன் -மாயாவதி
பிரதமர் மோடி வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டால் கலந்து கொள்வேன் என மாயாவதி கூறியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...