தேசிய செய்திகள்

ஒரு தேங்காய் சிரட்டை விலை ரூ.1,300 ஆன்லைனில் விற்பனை + "||" + Natural Coconut Shell Cup

ஒரு தேங்காய் சிரட்டை விலை ரூ.1,300 ஆன்லைனில் விற்பனை

ஒரு தேங்காய் சிரட்டை விலை ரூ.1,300  ஆன்லைனில் விற்பனை
ஒரு தேங்காய் சிரட்டை விலை ரூ.1,300 என ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது.
முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான அமேசான், தேங்காய் சிரட்டையை ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன் காய்ந்த வரட்டியை அமேசான் விற்பனைக்கு கொண்டு வந்தது.

தற்போது அடிப்படை விலை ஆயிரம் ரூபாயாகக் கொண்டு தேங்காய் சிரட்டையை அமேசான் தனது பக்கத்தில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. அதிலும் 3 ஆயிரம் ரூபாய் சிரட்டையை தள்ளுபடி விலையில் கொடுப்பதாக அறிவிப்பு வேறு உள்ளது.

இதைக் கண்டு இந்தியர்கள் பலரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். காசு கொடுத்து இதை வாங்கியதே இல்லை என்று ஒரு தரப்பினரோ கருத்து பதிவிட, இன்னும் சிலரோ, பணக்காரர் ஆக நினைப்பவர்கள் அமேசானிடம் சிரட்டையை விற்குமாறு அறிவுரை வழங்கியுள்ளனர். 

ஆசிரியரின் தேர்வுகள்...